இந்தியா
இந்தியாவிற்கு விஜயம் செய்த ரஷ்ய ஜனாதிபதி!

Dec 4, 2025 - 08:38 PM -

0

இந்தியாவிற்கு விஜயம் செய்த ரஷ்ய ஜனாதிபதி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை ரஷிய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் டெல்லி வந்தடைந்தார். 

இந்திய தலைநகர் டெல்லி வந்தடைந்த ஜனாதிபதி புட்டினை இந்திய பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்திய பிரதமர் இல்லத்திற்குச் செல்லும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளிக்கிறார். 

ஜனாதிபதி மாளிகையில் நாளை காலை ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு முப்படைகளின் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 

ஐதராபாத் இல்லத்தில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் ரஷிய ஜனாதிபதி புட்டின், பிரதமர் மோடியுடன் கலந்துகொள்கிறார். 

மாநாட்டுக்கு இடையே மோடி-புடின் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கும் அவர்கள், கூட்டு அறிக்கை வெளியிடுகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05