Dec 5, 2025 - 08:18 AM -
0
உக்ரைனுக்குச் சொந்தமான டொன்பாஸ் பிராந்தியத்தை பலவந்தமாகவேனும் கைப்பற்றப் போவதாகவும், அதனால் உக்ரைன் இராணுவம் கிழக்கு டொன்பாஸ் பிராந்தியத்திலிருந்து வெளியேற வேண்டும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீண்டும் ஒருமுறை உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்சமயம் இந்தியாவில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி புட்டின், அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக தமக்கு பாதகமான அனைத்து சமரசங்களையும் நிராகரிப்பதாகவும் அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.
"நாங்கள் டொன்பாஸை பலவந்தமாகப் பெறுவோம். அவ்வாறு நடக்காமல் இருக்க உக்ரைன் இராணுவம் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும்" என அவர் கூறினார்.
தற்போது டொன்பாஸில் சுமார் 85% ரஷ்யாவினால் நிர்வகிக்கப்படுவதுடன், அதன் கிழக்குப் பகுதியில் மாத்திரமே உக்ரைன் இராணுவம் நிலைகொண்டுள்ளது.
எவ்வாறாயினும், உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி தமது நிலத்தை விட்டுக்கொடுப்பதை நிராகரித்துள்ளார்.

