Dec 8, 2025 - 09:00 AM -
0
கார் பந்தயத்தில் மிகவும் பிரபலமானது 'பார்முலா 1' பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான 'பார்முலா 1' கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், அபுதாபியில் நடைபெற்ற 2025 பார்முலா ஒன் உலக செம்பியன் இறுதி போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த வீரர் லண்டோ நோரிஸ் செம்பியன் பட்டம் வென்றார்.
நடப்பு செம்பியனான நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனை 2 புள்ளிகள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளி, 35வது பார்முலா ஒன் உலக செம்பியனாக லண்டோ நோரிஸ் உருவெடுத்துள்ளார்.

