Dec 8, 2025 - 07:04 PM -
0
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 ஆவது ஒருநாள் போட்டி ராய்பூரில் கடந்த 03 ஆம் திகதி நடந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 2 ஆவது இன்னிங்சின் போது இந்திய அணி மெதுவாக பந்து வீசியது தெரிய வந்துள்ளது. இதற்காக இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்காலிக இந்திய அணியின் தலைவர் கேஎல் ராகுல் கூற்றத்தை ஒப்புக்கொண்டதால் மேற்கொண்டு விசாரணை நடத்த தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.

