Dec 10, 2025 - 05:45 PM -
0
தொழில்நுட்பத் துறையின் ஜாம்பவான்களான அமேசன் மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனங்கள், வரும் ஆண்டுகளில் இந்தியாவில் கூட்டாக 52.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளன.
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்பை வலுப்படுத்த மைக்ரோசொப்ட் 17.5 பில்லியன்டொலர்களை ஒதுக்கிய மறுநாளே அமேசன் தனது அறிவிப்பை வெளியிட்டது.
அதில், AI சார்ந்த டிஜிட்டல் மயமாக்கல், ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்த 2030-க்குள் 35 பில்லியன் டொலர்களை இந்தியாவில் முதலீடு செய்வதாகத் தெரிவித்துள்ளது.
வளர்ந்து வரும் AI மற்றும் கிளவுட் (Cloud) உட்கட்டமைப்பு மையமாகத் திகழும் இந்தியா, சமீப காலமாக உலகளாவிய தொழில்நுட்ப முதலீடுகளில் பெரும் அதிகரிப்பைக் கண்டு வருகிறது.
கடந்த அக்டோபரில், கூகுள் நிறுவனம் AI தரவு மையத்தை அமைக்க 15 பில்லியன் டொலர் முதலீட்டை அறிவித்தது.
மேலும், இந்த வாரத் தொடக்கத்தில், மும்பையைச் சேர்ந்த டாடா எலெக்ட்ரானிக்ஸின் 14 பில்லியன் டொலர் செமிகண்டக்டர் உற்பத்தித் திட்டத்தில் தனது முதல் முக்கிய வாடிக்கையாளராக இணைவதாக இன்டெல் அறிவித்தது.
அறிவிக்கப்பட்டுள்ள 35 பில்லியன் டொலர் முதலீடு, ஏற்கனவே இந்தியாவில் செய்யப்பட்ட 40 பில்லியன் டாலர் முதலீட்டின் தொடர்ச்சியாக அமையும். இதன் மூலம் இந்தியாவில் "மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக தங்கள் நிறுவனம் உருவெடுக்கும் என்று அமேசான் தெரிவித்துள்ளது.
இம்முதலீட்டின் பெரும் பகுதி உள்ளூர் கிளவுட் மற்றும் AI உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகச் செலவிடப்படும் என குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய அறிவிப்பின் படி இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட 3 பில்லியன் டொலர் முதலீட்டைத் தொடர்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

