Dec 10, 2025 - 06:56 PM -
0
சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட தரப்படுத்தல் பட்டியலில் விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை புதிய தரப்படுத்தல் பட்டியலை வௌியிட்டுள்ளது.
குறித்த தொடரில் இரண்டு சதங்கள் ஒரு அரை சதம் அடங்கலாக தொடரின் ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார்.
இதன்மூலம் அவர் இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளார்.
அந்தப் பட்டியலில் இந்தியாவின் ரோகித் சர்மா 781 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.
அதேநேரம் இரண்டாம் இடத்தில் இருந்த டேர்ல் மிட்செல் மூன்றாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ரோகித் மற்றும் விராட் கோலிக்கு இடையில் தரப்படுத்தலில் முதலிடத்திற்கான மோதல் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

