Dec 12, 2025 - 04:36 PM -
0
உடல்நலக்குறைவு காரணமாக இலங்கை வீரர் குசல் மெந்திஸ், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் சர்வதேச லீக் இருபதுக்கு 20 (ILT20) கிரிக்கெட் தொடரிலிருந்து தற்காலிகமாக விலக வேண்டியேற்பட்டுள்ளது.
வயிறு தொடர்பான சத்திரசிகிச்சை காரணமாக அவர் இத்தொடரிலிருந்து ஒரு வார காலத்திற்கு விலக நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குசல் மெந்திஸ் இத்தொடரில் ஷார்ஜா வொரியர்ஸ் (Sharjah Warriors) அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
இத்தொடர் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.
