Header Logo
SLIC
உலகம்
மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Jan 3, 2026 - 06:42 AM

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Mobitel Inner 1278
EDEX Inner

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

தெற்கு மெக்சிகன் மாநிலமான குரேரோவில் 6.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 

இதனால் உயரமான கட்டடங்கள் குலுங்கின. அச்சத்தால் பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு மெக்சிகோ ஜனாதிபதி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார். 

அப்போது நிலநடுக்க எச்சரிக்கை மணி ஒலித்ததால் செய்தியாளர் சந்திப்பு தடைபட்டது. சில மணி நேரத்துக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278