Header Logo

வணிகம்
7 Star கோதுமை மாவின் பிரதான அனுசரணையுடன் CAHM ஆரம்பித்துள்ள இளம் சமையல் வல்லுனர்களுக்கான போட்டி

Jan 26, 2026 - 03:46 PM -

0

7 Star கோதுமை மாவின் பிரதான அனுசரணையுடன் CAHM ஆரம்பித்துள்ள இளம் சமையல் வல்லுனர்களுக்கான போட்டி

கொழும்பு, இலங்கை - மாலபேயில் அமைந்துள்ள SLIIT நிறுவனத்தின் பிரதான பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள, விருந்தோம்பல் மற்றும் சமையற்கலை தொடர்பான இலங்கையின் முன்னணி தனியார் பயிற்சி நிலையமான The Colombo Academy of Hospitality Management (Pvt) Ltd (CAHM) ஆனது CAHM 7-Star Junior Chef Competition - Season 01 என்ற போட்டியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளது. அடுத்த தலைமுறை சமையற்கலை வல்லுனர்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இப்போட்டிக்கு ஆதரவளிக்கும் வகையில், தனது பிரதான வர்த்தகநாமமான 7 Star கோதுமை மாவின் பிரதான அனுசரணையை வழங்குவதையிட்டு Serendib Flour Mills (Pvt) Ltd பெருமை கொள்கின்றது. 

சமையற்கலைகளில் ஆர்வம் கொண்ட, அது குறித்த திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள விரும்புகின்ற, 13 முதல் 16 வயது கொண்ட பாடசாலை மாணவர்கள் பங்கேற்கக்கூடிய வகையில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பாரம்பரியமான உயர் கல்வி வழிமுறைகளுக்கு அப்பால் விருந்தோம்பல் துறையில் கிடைக்கும் வேலைவாய்ப்புக்கள் குறித்து இதன் மூலமாக காண்பிக்கப்படவுள்ளது. இலங்கையில் விருந்தோம்பல் துறை வெகுவேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற நிலையில், தொழிற்திறன் மிக்கவர்களுக்கான தேவையும் அதிகரித்து வருவதற்கு இத்தொழிற்துறை முகங்கொடுத்துள்ள ஒரு காலகட்டத்தில் இம்முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இளம் மாணவர்கள் மத்தியில் சமையற்கலை உலகினை இவ்வயதிலேயே அறிமுகப்படுத்துவதன் மூலமாக, படைப்புத்திறன் மற்றும் தொழில்திறனை ஊக்குவித்து, முறைசார்ந்த, தொழில் ஊக்கம் கொண்ட திறமையை வளர்ப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பளிப்பதை நோக்கமாகக் கொண்டே CAHM இதனை ஆரம்பித்துள்ளது. 

Colombo Academy of Hospitality Management (Pvt) Ltd நிறுவனத்தின் தலைவர் திரு. எரள் வீரசிங்க அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “சமையற்கலை மற்றும் விருந்தோம்பல் துறையில் உண்மையான திறமைகளைக் கொண்ட இளம் தலைமுறையை இனங்கண்டு, அவர்களை ஊக்குவிப்பதற்காகவே The CAHM 7-Star Junior Chef Competition போட்டி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இளம் வயதிலேயே முறைசார்ந்த, தொழிற்துறையுடன் கூடிய மேடையை அறிமுகம் செய்து வைப்பதனூடாக விருந்தோம்பல் தொழிற்துறையானது அவர்களின் எதிர்காலத்திற்கு அர்த்தமும், பயனும் நிறைந்த தொழில்வாய்ப்பிற்கான வழிமுறையாக அமைத்துக் கொள்ள நாம் அவர்களுக்கு உதவுகின்றோம். தன்னம்பிக்கை, படைப்புத்திறன், மற்றும் நடைமுறை ஆற்றல் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள இம்முயற்சி அவர்களுக்கு உதவுவதுடன், இலங்கையின் விருந்தோம்பல் தொழில்துறையைப் பொறுத்தவரையில் எதிர்காலத்தில் தொழில்திறமை கொண்ட ஆளணியொன்றைத் தோற்றுவிப்பதற்கும் பங்களிக்கின்றது. இதற்கிணங்க, வெற்றியாளருக்கு ரூ. 2 மில்லியன் மதிப்புடைய முழு உதவித்தொகையை வழங்க நாம் முடிவு செய்துள்ளோம்.” 

Serendib Flour Mills (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. விஜய் ஷர்மா அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “பிரதான அனுசரணையாளர் என்ற வகையில், இளம் திறமைசாலிகளை ஊக்குவித்து, நாளைய சமையல் வல்லுனர்களை வளர்ப்பதில் 7 Star கோதுமை மா அர்ப்பணிப்புடன் உள்ளது. தரமான சேர்க்கைப் பொருட்கள் மூலமாக தயாரிக்கும் ஒவ்வொரு வகையான உணவையும் மெருகேற்ற முடியும் என நாம் நம்புவதுடன், இக்கூட்டாண்மையின் மூலமாக அடுத்த தலைமுறை தொழில்ரீதியான சமையற்கலை வல்லுனர்களுக்கு நாம் வலுவூட்டுகிறோம். தேசத்திற்கு வளமூட்டுவதை தனது நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகின்ற Serendib Flour Mills, இம்முயற்சியின் மூலமாக தொழில்ரீதியான சமையற்கலை வல்லுனர்களின் அடுத்த தலைமுறையை வளப்படுத்தவுள்ளது.” 

மா உற்பத்தியில் இலங்கையிலுள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்ற Serendib Flour Mills (Pvt) Ltd, பேக்கரிகள், தொழிலகங்கள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள், சிற்றுண்டியகங்கள் மற்றும் வீடுகளுக்கு உயர் தரம் கொண்ட கோதுமை மாவை விநியோகித்து வருகின்றது. 18 ஆண்டு கால செயல்பாட்டு அனுபவத்துடன், தேசத்தை வளப்படுத்த வேண்டும் என்ற தனது நோக்கத்தினூடாக நாட்டின் உணவுப் பாதுகாப்பில் இந்நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகின்றது. 7 Star என்ற நாமத்தின் கீழ் செரண்டிப் நிறுவனத்தின் தயாரிப்புக்கள் சந்தைப்படுத்தப்பட்டு வருவதுடன், தரம், நிலைமாறாமை, மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அங்கீகாரம் பெற்று விளங்குகின்றன. ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல்வேறுபட்ட துறைகளில் வணிக ஈடுபாடுகளைக் கொண்டுள்ள முன்னணி குடும்ப வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக, டுபாய் மாநகரத்தில் தனது தலைமையகத்தைக் கொண்டுள்ள Al Ghurair குழுமத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழான ஒரு துணை நிறுவனமான செரண்டிப், இலங்கையின் உணவுத் தொழிற்துறை மீதான தனது நீண்ட கால அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், தனது செயல்பாடுகள் அனைத்திலும் நிலைபேற்றியல் கொண்ட நடைமுறைகளைப் பேணி, புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றை மேம்படுத்தி வருகின்றது. 

சர்வதேச ரீதியாக அங்கீகாரம் பெற்ற, அவுஸ்திரேலியாவிலுள்ள William Angliss Institute (RTO3045) உடன் கூட்டாண்மையைக் கொண்டுள்ள இலங்கையிலுள்ள ஒரேயொரு விருந்தோம்பல் மற்றும் சமையற்கலை கல்வி நிறுவனமாக Colombo Academy of Hospitality Management (Pvt) Ltd (CAHM) திகழ்ந்து வருகிறது. சர்வதேச அரங்கில் வெற்றி பெறுவதற்கு தம்மை தயார்படுத்திக் கொள்ளும் அதிசிறந்த கற்றல் அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்கி, சமையற்கலைகளில் சர்வதேச மட்டத்திற்கு இணையான பயிற்சிகளை CAHM வழங்கி வருகின்றது. 

CAHM 7-Star Junior Chef Competition போட்டியை ஒரு வருடாந்த நிகழ்வாக முன்னெடுத்துச் செல்வதற்கு CAHM திட்டமிட்டுள்ளதுடன், இலங்கையில் விருந்தோம்பல் மற்றும் சமையற்கலை தொழிற்துறைகளில் தொழில்ரீதியான திறன் கொண்டவர்களுக்கான கேள்வி அதிகரித்துச் செல்லும் நிலையில், அதற்குப் பங்களிக்கும் வகையில் இளம் திறமைசாலிகளை வளர்ப்பதற்காக தனது கூட்டாண்மைகளை தொடர்ந்தும் விரிவுபடுத்தி வருகின்றது.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title