Header Logo
SLIC
உலகம்
14 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி விமான சேவை!

Jan 30, 2026 - 02:43 PM

14 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி விமான சேவை!
Mobitel Inner 1278
EDEX Inner

பங்களாதேஷ் - பாகிஸ்தான் இடையே கடந்த 14 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம், நேற்று (29) 150 பயணிகளுடன் டாக்காவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்குப் புறப்பட்டுச் சென்றது. 

2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் முதல் வழக்கமான நேரடி விமானச் சேவை இதுவாகும். 

இதுவரை பங்களாதேஷ் மக்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல துபாய் அல்லது தோஹா வழியாகச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. 

ஆனால் இனி வாரத்திற்கு இரண்டு முறை நேரடி விமானங்கள் இயக்கப்பட உள்ளன. 

2024 இல் பங்களாதேஷில் ஷேக் ஹசீனா அரசு வீழ்ந்த பிறகு, இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் பதவி ஏற்றார். அவரது தலைமையின்கீழ் அந்நாடு பாகிஸ்தானுடன் தனது உறவை மேம்படுத்தி வருகிறது. அதே சமயம், இந்தியாவுடனான உறவில் விரிசல் அதிகரித்து வருகிறது. 

ஏற்கனவே 2024 நவம்பரில் கராச்சியிலிருந்து வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்திற்குச் சரக்குக் கப்பல் போக்குவரத்துத் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது விமானச் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278