Header Logo

வடக்கு
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் வீதி ஓட்ட நிகழ்வு!

Jan 30, 2026 - 05:59 PM -

0

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் வீதி ஓட்ட நிகழ்வு!

வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு இன்று (30) வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் வீதி ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது. 

ஆண்களுக்கான வீதி ஓட்ட நிகழ்வானது வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி மாவடி சந்தி, மூளாய் சந்தி, சுழிபுரம் சந்தி, சித்தங்கேணி சந்தி ஊடாக மீண்டும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியை வந்தடைந்தது. 

அதேபோல பெண்களுக்கான வீதியோட்ட நிகழ்வானது சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி சித்தங்கேணி சந்தி ஊடாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியை வந்தடைந்தது. 

அந்தவகையில் ஆண்கள் அணியில் முதலியார் குமாரசுவாமி இல்லத்தை சேர்ந்த ஈ.தர்சிகன் முதலாம் இடத்தையும், பெண்கள் அணியில் சபாரட்ணசிங்கி இல்லத்தை சேர்ந்த கே.கேசவி முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர். 

அதனைத் தொடர்ந்து வெற்றியீட்டிய வீர - வீராங்கனைகளுக்கான மற்றும் போட்டியை முழுமையாக நிறைவு செய்த மாணவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. 

கல்லூரியின் அதிபர் சி.தனஞ்சயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். உடற்கல்வி ஆசிரியர் சங்க தலைவர் ப.தர்மகுமாரன் கலந்து சிறப்பித்ததுடன் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title