Header Logo
Mogo Academy

பல்சுவை
கின்னஸ் சாதனை படைத்த இராட்சத மலைப்பாம்பு!

Feb 12, 2026 - 06:45 PM -

0

கின்னஸ் சாதனை படைத்த இராட்சத மலைப்பாம்பு!
Mobitel inner

இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் மரோஸ் பகுதியில் உலகின் மிக நீளமான இராட்சத பெண் மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

7.22 மீட்டர் நீளமும், சுமார் 96.5 கிலோ எடையும் கொண்ட இந்த மலைப்பாம்பு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 

இந்த பாம்புக்கு இபு பரோன் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இபு பரோன் ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு வகையைச் சேர்ந்தது. உலகின் மிக நீளமான பாம்பு இனமாக ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புகள் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

இவை பொதுவாக 3 முதல் 6 மீட்டர் (10 முதல் 19 அடி) வரை நீளம் கொண்டவை. 20 அடிக்கு மேல் நீளமான பாம்புகள் மிகவும் அரிதானவை. 

இபு பரோனின் நீளம் அதற்கு மயக்க மருந்து கொடுத்து எடுக்கப்படவில்லை என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பு தெரிவித்துள்ளது. 

ஒருவேளை அதற்கு மயக்க மருந்து கொடுத்து அதன் உடல் முழுமையாக ஓய்வெடுக்கும்போது அளவீடு செய்தால் அது மேலும் 10 சதவீதம் நீளமாக 7.9 மீட்டர் வரை (26 அடி) இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புகள் விஷமற்றவை என்றாலும், அவற்றின் அளவு மற்றும் வலிமை காரணமாக கால்நடைகளைக் கொல்லும் தன்மை கொண்டவை எனக் குறிப்பிடப்படுகின்றது. 

அத்துடன் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், மனிதர்களையும் கொல்லும் திறன் கொண்டவை என தெரிவிக்கப்படுகின்றது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara