Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
திருமணத்திலும் செயற்கை நுண்ணறிவு!

Feb 14, 2026 - 10:50 AM

திருமணத்திலும் செயற்கை நுண்ணறிவு!
Mobitel Inner 1278

இந்தியாவில், திருமண விருந்தின் உணவு ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். பெங்களூரு போன்ற நகரங்களில் பபே முறையில் பல வகையான உணவுகள் பரிமாறப்படுகின்றன. 

அவ்வளவு உணவுகளில் எதை சாப்பிடுவது? எதை தவிர்ப்பது? எல்லாவற்றையும் ருசிக்க முடியாமல் பலர் வருத்தப்படுவது சாதாரணம். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் நிபுணர் பங்கஜ், பபே ஜி.பி.டி. (BuffetGPT) என்ற செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளார். 

திருமண பபேவில் உள்ள உணவுகளை கணினி பார்வை (Computer Vision) மூலம் ஸ்கேன் செய்கிறது. பிறகு, நம்முடைய உடல்நலம் மற்றும் தினசரி உட்கொள்ளும் உணவு அளவை கணக்கில் கொண்டு, என்ன சாப்பிடலாம். எதை தவிர்க்கலாம், எவ்வளவு அளவு சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கிறது. இதனால் உடலுக்கும், வயிற்றுக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் அதிகமான உணவு வகைகளை ருசிக்க முடியும். 

பல திருமணங்களுக்கு சென்றபோது, எல்லா உணவுகளையும் ருசிக்க முடியாததால் ஏற்பட்ட அனுபவமே இந்த யோசனைக்கு காரணம் என்கிறார் பங்கஜ். இந்த கருவி இன்னும் சோதனை கட்டத்தில்தான் உள்ளது. 

இவரது நண்பரின் திருமணத்தில் ஆல்பா பதிப்பாக பயன்படுத்தி நல்ல முடிவு கிடைத்ததாக கூறப்படுகிறது. சமூக வலைத் தளங்களில் இந்த யோசனைக்கு பாராட்டுகளும், சில கிண்டல்களும் வந்துள்ளன. கேட்டரிங் நிபுணர்களின் கருத்துகளை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

பபே ஜி.பி.டி. போன்ற புதுமைகள், பெரிய திருமண விருந்துகளில் உணவு தேர்வை எளிதாக்கி, விருந்தினர்களின் அனுபவத்தை மேம்படுத்த உதவலாம்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

Mobitel 1278