Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (21.2.2026)!

Feb 21, 2026 - 09:11 AM

இன்றைய ராசிப்பலன் (21.2.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (21) மீனம், மேஷ ராசியில் ரேவதி பின்பு அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று முக்கிய கிரகங்களின் சேர்க்கை கும்ப ராசியில் பல கிரகங்களின் சேர்க்கை உள்ளதால் தன யோகம் உருவாகிறது. நடக்கிறது. இது குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இன்று சிம்மம் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. 

மேஷ ராசி பலன் 

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ராசி அதிபதியான செவ்வாய் பகவான் கும்ப ராசி நல்ல கிரகங்களோடு சேர்ந்துள்ளதாக உங்கள் வாழ்க்கை துணையிடமிருந்து எதிர்பார்த்த அன்பு ஆதரவும் கிடைக்கும். நிலுவையில் உள்ள எந்த ஒரு வேலையும் சரியாக முடிக்க முடியும்.அதே சமயம் உங்கள் பிள்ளைகளிடமிருந்து சில ஏமாற்றம் அளிக்கும் செய்தியை பெற வாய்ப்பு உண்டு. இன்று மாலை நேரத்தில் அன்புக்குரியவர்களே சந்திக்கும் வாய்ப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். இன்று ஆக்கப்பூர்வமான யோசனைகளுடன் செயல்படுவது நல்லது. 

ரிஷப ராசி பலன் 

ரிஷப ராசிக்கு சேர்ந்தவர்களுக்கு மன நிறைவு மற்றும் மன அமைதி கிடைக்கும் நாள். அரசியல் அல்லது அரசு துறையில் உள்ளவர்களுக்கு தங்களின் முயற்சிகள் நல்ல வெற்றியை தரும். இன்று உங்கள் தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் அல்லது கூட்டணிகள் அமையும். இன்று உங்களுடைய அந்தஸ்து அதிகரிக்கும். இன்று சில விரும்பத்தகாத நபர்களை சந்திக்க நேரிடும். இது சில பிரச்சினைகளை உருவாக்க வாய்ப்பு உண்டு. இந்த உங்கள் உணர்வுகளை கட்டுக்குள் வைக்கவும். இன்று உங்கள் பிள்ளைகளிடம் இருந்து நிவாரணம் தரும் செய்திகளை பெறுவீர்கள். 

மிதுன ராசி பலன் 

மிதுன ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று சற்று சாதகமற்ற நாளாக இருக்கும். இன்று மதிப்பு மிக்க பொருட்களை இழக்க நேரிடும் அல்லது திருடப்பட வாய்ப்பு உண்டு. அதனால் உங்கள் முக்கிய பொருட்கள் மற்றும் ஆவணங்களை கவனமாக பாதுகாக்கவும். இன்று பிள்ளைகள் கல்வியின் அல்லது விளையாட்டு போட்டிகளில் நல்ல வெற்றியை பெற வாய்ப்பு உண்டு. இன்று உங்களின் செயல்பாடு குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நிலுவையில் உள்ள எந்த ஒரு வேலையும் சரியாக செய்து முடிக்க முடியும். இன்று இரவில் சில உற்சாகமான மற்றும் மங்களகரமான நிகழ்வில் பங்கேற்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும். 

கடக ராசி பலன் 

கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று பாக்கிய ஸ்தானத்தில் சந்திரனின் சஞ்சாரம் அவருடைய செல்வ நிலையில் அதிகரிக்கும். நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் முன்னேற்றம் ஏற்படும். அரசு மரியாதை மற்றும் கௌரவம் கிடைக்கலாம். குழந்தைகள் தொடர்பான பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். நீங்கள் மேற்கொள்ள கூடிய பயணங்கள் இனிமையாகவும் நன்மை தரக்கூடியதாக அமையும். மாலை நேரத்தில் அன்புக்குரியவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலக பணிகளை முடிப்பதில் சூழல் சாதகம் மட்டும்தான் இருக்கும் என்பதால், சரியான திட்டமிடலும், கவனமும் தேவை. 

சிம்ம ராசி பலன் 

சிம்ம ராசி சேர்ந்தவர்களுக்கு ராசி அதிபதியான சூரியன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் மன தைரியத்தை அதிகரிக்கும். உங்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் ஏற்படலாம். உங்களுடைய இனிமையான பேச்சு மரியாதை பெற்று தரும். கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறலாம். செல்வாக்கு அதிகரிக்கும். அலைச்சல் குறையும். சில கண் தொடர்பான பிரச்சனையை சந்திக்க வாய்ப்பு உண்டு. இன்று போட்டிகளை சிறப்பாக எதிர்கொள்வீர்கள். உங்கள் வேலையில் பணிவும் திறமையும் வெளிப்படுத்த முடியும். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்களுடைய மன தைரியம் அதிகரிக்கும். வேலை மற்றும் வணிக துறை தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் முன்னேற்றம் அடையும். உங்களுடைய பிள்ளைகளிடம் இருந்து இனிமையான செய்தி மற்றும் அவர்களின் செயல் திருப்தியை தரும். இன்று ஏதேனும் சட்ட வழக்கு இருப்பின் அதில் வெற்றி கிடைக்கும். இது உங்களுக்கு நிம்மதி பெருமூச்சு விட உதவும். இன்று உங்களுக்கு சுப செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று இனிமையான சூழ்நிலை உங்களை சூழ்ந்திருக்கும். இது உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். பல நாட்களாக இருந்து வரும் பிரச்சனைகள் குறையும். பெரிய பணப்பரிவுரதனைகளை தவிர்க்கவும். இது உங்களுக்கு சிக்கலை தர வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். இன்று திடீர் பயணத்திட்டங்கள் ஒத்திவைப்பது நல்லது. காதல் உறவு ஆழமாகும். உங்களுடைய உடலில் கவனம் செலுத்த வேண்டிய நாள். இன்று உங்களுடைய திட்டமிட்டு வேலைகள் பூச்சி அடையும். 

விருச்சிக ராசி பலன் 

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று ராசிக்கு எந்த இடத்தில் சனி பகவான் இருப்பது மற்றும் ராசிநாதனின் அமைப்பு உங்களுக்கு செழிப்பையும், சந்ததி வளர்வதற்கு நல்ல சூழலை ஏற்படுத்தும். இன்று சிலருக்கு வாயு, சிறுநீர் மற்றும் ரத்தம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் நலப் பிரச்சினை தொடர்பாக மருத்துவரை உடனடியாக அணுகுவது அவசியம். இன்று தொழில் தொடர்பாக உங்கள் திட்டங்கள் முன்னேற்றம் அடையும். புதிய தொழில்நுட்ப திறன்களை பயன்படுத்த நினைப்பீர்கள். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று உங்கள் எதிரிகள் கூட புகழக்கூடிய நல்ல நாளாக இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு இன்று கௌரவமும், அதிகாரம் படைத்தவர்களுடன் நெருக்கமும் ஏற்படும். கூட்டணி மூலமும் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் உங்கள் துணையின் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நீங்கள் சமூகம் மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். காதல் உறவில் மகிழ்ச்சியான சூழல் உருவாக்கும்.இன்று ஊக வணிகத்தில் கவனம் தேவை. 

கும்ப ராசி பலன் 

கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உடல் நலம் மற்றும் செல்வநிலை சற்று பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.உங்கள் ராசி அதிபதியான சனி பகவான் உதயமாகிறார். இதனால் தேவையற்ற பாதை, வீண் வாக்குவாதம், உங்களுடைய யோசனையற்ற செயல்கள் அதிகரிக்கும். மேலும் சில பாதகமான செய்திகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. இதனால் நீங்கள் திடீர் பயணம் செய்ய நேரிடும். இன்றைய எச்சரிக்கையாக இருப்பதோடு மோதல் மற்றும் சத்திரவர்களை தவிர்க்கவும். 

மீன ராசி பலன் 

மீன ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று பிள்ளைகள் தொடர்பான கவலைகள் ஏற்படும். உங்கள் வேலையை மேம்படுத்துவதில் சரியான திட்டங்களுடன் செயல்படவும். உங்கள் திருமண வாழ்க்கையில் நீண்ட காலமாக இருக்கக்கூடிய மனக்கசப்பு நீங்கும். உங்களுடைய உறவில் நிதானத்தை கடைபிடிக்காமல் வாக்குவாதம் அல்லது உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று ஆன்மீக ஸ்தலத்திற்கு செல்வது தர்ம காரியங்களில் ஈடுபடுவது போன்ற சுப செலவுகளை சந்திக்க நேரிடும். இன்று நீங்கள் எந்த ஒரு பயணம் செய்தாலும் எச்சரிக்கையாக இருக்கவும். குருவின் அருளை பெற வேண்டிய நாள்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

Mobitel 1278