Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
கள்ளக்காதலால் கணவனுக்கு நேர்ந்த கதி!

Feb 25, 2026 - 05:20 PM

கள்ளக்காதலால் கணவனுக்கு நேர்ந்த கதி!
Mobitel Inner 1278

பிரபாகரன் முகம் மற்றும் கழுத்தில் காயங்கள் இருப்பதால் உறவினர் வற்புறுத்தலின் பேரில் கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார். 

இந்தியாவின் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள குளத்துபட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (32) . மதுபானக் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அபிராமி (26). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த 12 ஆம் திகதி குளத்துப்பட்டியில் வீதியோரம் உள்ள ஒரு புளிய மரத்தடியில் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். 

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பிரபாகரன் முகம் மற்றும் கழுத்தில் காயங்கள் இருப்பதால் உறவினர் வற்புறுத்தலின் பேரில் கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புத்தாநத்தம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. 

விசாரணையில் அபிராமிக்கும் அவரது உறவினரான பப்லு என்ற பிரபு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் இல்லாத நேரத்தில் அடிக்கடி பிரபு அபிராமி வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து இருவரையும் கண்டித்துள்ளார். அப்படி இருந்த போதிலும் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். 

இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் பிரபாகரனை கொலை செய்ய மனைவி அபிராமி மற்றும் பிரபு திட்டமிட்டனர். அதன்படி கடந்த 12 ஆம் திகதி வேலைக்குச் சென்று வீட்டுக்கு திரும்பிய பிரபாகரனிடம் நைசாக பேசிய பிரபுவின் நண்பர்கள் அவரை அழைத்துச் சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்த வைத்துள்ளனர். 

பின்னர் ஃபுல் மப்பில் இருந்த அவரை மூன்று பேரும் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு மரத்தடியில் உடலை வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தில் அபிராமி மற்றும் பிரபு ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த பிரபு நண்பர்களை தேடி வருகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278