Header Logo

செய்திகள்
மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

Mar 3, 2026 - 08:35 PM -

0

மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, இன்று (03) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி முதலாவது விமானம் புறப்பட்டுச் சென்றது.

 

ஃபிட்ஸ் எயார் (Fits Air) விமான சேவைக்குச் சொந்தமான 8D 821 என்ற விமானம் இன்று பிற்பகல் 01.20 மணியளவில் கட்டுநாயக்கவிலிருந்து துபாய் நோக்கிப் புறப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

 

இந்த விமானத்தில் 47 பயணிகளும் 10 விமானப் பணியாளர்களும் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

மத்திய கிழக்கு வான்பரப்பு குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்கு மாத்திரம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடைப்பட்ட நேரத்தில் விமானங்கள் இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பறக்கின்றன.

 

இதற்கிடையில், ஏர் அரேபியா (Air Arabia) நிறுவனத்திற்குச் சொந்தமான G-9509 என்ற விமானம் இன்று மாலை 04.45 மணியளவில் கட்டுநாயக்கவிலிருந்து சார்ஜா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது. இதில் 44 பயணிகளும் 10 பணியாளர்களும் பயணித்துள்ளனர்.

 

எதிர்வரும் நாட்களில் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான ஏனைய விமான சேவைகளும் படிப்படியாக வழமைக்குத் திரும்புவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title