Header Logo

செய்திகள்
பொருளாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்: ஈரானின் கடும் எச்சரிக்கை

Mar 3, 2026 - 10:25 PM -

0

பொருளாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்: ஈரானின் கடும் எச்சரிக்கை

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்கள் தொடருமானால், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து பொருளாதார மையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

தாக்குதல்கள் தொடர்ந்தால் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை ஜெனரல் இப்ராஹிம் ஜப்பாரி எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் பிரதான மையங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தத் தீர்மானித்தால், அதற்குப் பதிலடியாக பிராந்தியத்தின் அனைத்து பொருளாதார மையங்களும் இலக்கு வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை ஏற்கனவே 80 டொலர்களைக் கடந்துள்ள நிலையில், இது விரைவில் 200 டொலர்களை எட்டக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஈரான் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் காரணமாக இதுவரை அந்நாட்டில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் செம்பிறை சங்கம் அறிவித்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title