Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (06.03.2026)!

Mar 6, 2026 - 09:11 AM

இன்றைய ராசிப்பலன் (06.03.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (06) கன்னி ராசியில் அஸ்தம் பின் சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று கும்ப ராசியில் உருவாகும் மங்களாதித்ய யோகம் உருவாகும் நாள். இன்று சனி பெயர்ச்சி நடக்கிறது. இன்று கும்பம் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று சுபமுகூர்த்த தினம். 

மேஷம் ராசி பலன் 

மேஷம் ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று, சந்திரன் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் அமர்வது உங்களுக்கு உறவில் வலுவான நிலையை ஏற்படும். இன்று நீங்கள் சில நல்ல ஒப்பந்தங்களை பெற வாய்ப்பு உண்டு. அரசாங்கத்திடம் மதிப்பு மரியாதை பெறலாம். பொருளாதார ரீதியாக முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் ஏற்படும். ராசி அதிபதியின் சஞ்சாரம் உங்களுக்கு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது, சுபநிகழ்வுகளை நடத்தும் வாய்ப்பு ஏற்படுத்தும். இன்று சமூகத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷபம் ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று, உங்களுடைய கவனம் புதிய திட்டங்களில் அதிகம் இருக்கும். ஆன்மீகம் மற்றும் சுப காரியங்களில் ஈடுபடுபீர்கள். இது உங்களுடைய மன அமைதியை அதிகரிக்கும். எந்தவித சட்ட தகராறுகள் விஷயத்தில் நிதானம் தேவை. சிலருக்கு வீடு இருந்து வேலை தொடர்பான இடமாற்றம் வெற்றிகரமாக அமையலாம். நாளின் பிற்பகுதியில் சில சிக்கல் இருந்த போதிலும் உங்கள் மனதில் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் சுபமான சில மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்கள் ஆசைகள் நிறைவேறும். வேலையில் சூழ்நிலை சாதகமானதாக மாறும். இன்று உங்கள் சக ஊழியர்கள் உங்களை ஆதரிக்க வாய்ப்பு உண்டு. 

மிதுனம் ராசி பலன் 

மிதுன ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று மிகவும் ஆக்கப்பூர்வமான நாள். கலைத்துறை அல்லது புதிய படைப்பு தொடர்பான முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். இன்று நீங்கள் விரும்பும் சில முக்கிய வேலைகளை செய்து முடிக்க முடியும். உங்கள் மனதில் நிம்மதி அதிகரிக்கும். புதிய திட்டங்கள் மனதில் தோன்றும். மேலதிகாரிகளின் பாராட்டு, சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இதுநாள் வேளையில் முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். இந்த வியாபாரிகள் தங்களின் திட்டங்களால் நல்ல வெற்றியை பெறுவார்கள். இன்று உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். 

கடகம் ராசி பலன் 

கடக ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று மிகவும் ஆக்கப்பூர்வமான நாள். இன்று நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த உங்கள் முக்கிய வேலைகள் நிறைவடைய வாய்ப்பு உண்டு. சில முக்கிய விஷயங்கள் குறித்து குடும்பத்தினருடன் விவாதிப்பீர்கள். இன்று அலுவலகத்தில் உங்களுடைய யோசனைகள் மதிக்கப்படும். இதனால் வேலை தொடர்பான சூழ்நிலை சாதகமாக மாறும். மேலும் சங்க ஊழியர்களின் ஆதரவை பெறுவீர்கள். இன்று நீங்கள் திருமணம் போன்ற நல்ல நிகழ்வுகள் எல்லாம் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டு. உங்களுடைய குடும்ப பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும். 

சிம்மம் ராசி பலன் 

சிம்ம ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்களுக்கு பரபரப்பான நாளாகவும் பனி சுமை நிறைந்த நாளாகவும் அமையலாம். இருப்பினும் உங்களுடைய மனம் ஆன்மீகம், தியானம் போன்ற விஷயங்களில் ஈடுபடுத்தினால் எதையும் சுமுகமாக கையாள முடியும். வேலையில் மூத்த அதிகாரிகளின் செயல்பாடு உங்கள் வேலையை கடினமாகலாம். இன்று நீங்கள் சில சுப காரியங்களில் பங்கேற்க வாய்ப்பு உண்டு. உங்கள் வேலை மற்றும் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்களுக்கு தொழில் வாய்ப்புகள் குறைவாக இருக்கும். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்கள் செயல்பாடு மற்றும் பேச்சில் நிதானத்தையும் எச்சரிக்கையையும் கடைப்பிடிக்கவும். மேலும் பிறரிடம் எந்தவிதமான மோதல் போக்கையும் காட்ட வேண்டாம். இன்று குடும்பத்தினருடன் சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் விதியை நம்பி நம்பிக்கையுடன் செயல்படுவோம். மாலை நேரம் உங்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரும். இன்று நீங்கள் உங்கள் வேலை மற்றும் குடும்ப பொறுப்புகளை சிறப்பாக நிர்வகிப்பீர்கள்.பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்களுக்கு அதிக அளவில் நன்மை கிடைக்கக்கூடிய நாள். புதிய திட்டங்களை மனதில் கொண்டு வேலை செய்வது நல்ல. செய்வது நல்லது குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் நீங்கும். குறிப்பாக சிலருக்கு சொத்து தொடர்பான சிக்கல்களில் கவனம் தேவை. செலவுகளை கட்டுப்படுத்துவதும் அத்தியாவசியமான பொருட்களை மட்டும் வாங்குவது நல்லது. குடும்ப சூழல் மற்றும் நிதி நிலைமை உங்கள் மனதில் அமைதியற்ற நிலைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உண்டு. 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்களுடைய நிதி நிலையை மனதில் கொண்டு நிதானமாக செயல்படுவது உங்களை முன்னேற்றத்திற்கு உதவும். இன்று எதிலும் விடாமுயற்சியுடன் செயல்படுவது நல்லது. உங்கள் குடும்பத்தின் அமைதி மற்றும் திருத்தன்மை அதிகரிக்கும். குழுவாக செய்யக்கூடிய வேலை அல்லது சொந்த தொழிலில் புகுத்தக்கூடிய புதுமை எதிர்காலத்தில் நன்மையை தரும். இன்று உங்கள் வேலை தொடர்பான விஷயங்களில் புத்துணர்வு பெறுவீர்கள். இன்று நீங்கள் திடீர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. அலுவலக பணி மற்றும் பிரச்சினைகளை நிதானமாக கையாள்வது நல்லது. 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள். சொந்தத் தொழில், வியாபாரம் தொடர்பாக நீங்கள் எடுக்கும் சிறிய ரிஸ்க் குறிப்பிடத்தக்க லாபத்தை தரும். உங்களை அன்றாட வேலை மற்றும் வழக்கத்தை மேம்படுத்த வேண்டிய நாள். அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவிடுவது மற்றும் சிலருக்காக பணம் செலவிட வாய்ப்பு உண்டு. சில புதிய வாய்ப்புகள் நெருங்கி வரும். அதை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அலுவலக பணி தொடர்பாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் . இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய நாள். 

மகரம் ராசி பலன் 

மகர ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று ஒரு சாதாரண நாள். இன்று நீங்கள் சிலர் நலம் சேர்ந்து செய்யக்கூடிய வணிகத்தில் குறிப்பிடத்தக்க லாபத்தை பெற முடியும். இன்று உங்கள் பிள்ளைகளின் செயல்பாடு அல்லது அவர்கள் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியது இருக்கும். அதனால் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. ஒரே நேரத்தில் பல பணிகளை செய்வது தவிர்ப்பதும், பணிகளை திட்டமிடுவதும் நல்லது. இன்று வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் உங்களை கோபப்படுத்த வாய்ப்பு உண்டு. சூழ்நிலை கவனமாக கையாள வேண்டிய நாள். காதல் விஷயத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். 

கும்பம் ராசி பலன் 

கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்கள் உடல்நலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். பருவநிலை மாற்றம் காரணமாக சில உடல் சார்ந்த பிரச்சினைகளை சிந்தனைக்கு நேரிடும். இது உங்கள் உணவு பழக்க வழக்கத்தில் கவன குறைவாக இருக்க வேண்டாம். வணிகம் தொடர்பான விஷயங்களில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் பேச்சு மற்றும் செயல், முடிவு எடுக்கும் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிக்கவும். வேலையில் இன்று சில சவால்களை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் உங்களுடைய செயல்பாடு பாராட்டை பெற்று தரும். 

மீனம் ராசி பலன் 

மீன ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். இன்று உங்கள் வேலை தொழில் தொடர்பாக ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டாம். இன்று பொறுமை மற்றும் மென்மையான நடத்தை உங்களை கடின சூழலில் இருந்து வெளிவர உதவும். உங்கள் வேலைகளை புத்திசாலித்தனமாக முடிக்க வேண்டிய நாள். இன்று தேவைப்படும் நபர்களுக்கு முடிந்த அளவு உதவவும். இன்று வணிகம் தொடர்பாக உங்களுக்கு சில ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. சில கடினமான பணிகள் காரணமாக நாள் முழுவதும் அலுவலகத்தில் மும்முரமாக செயல்படுவீர்கள்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

Mobitel 1278