Header Logo

செய்திகள்
அரிசி உப உற்பத்திப் பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை

Mar 13, 2026 - 10:39 PM -

0

அரிசி உப உற்பத்திப் பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை

அரிசியைப் பயன்படுத்தி உப உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை வரும் காலத்தில் தளர்த்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். 

மஹாவலி நீர் முகாமைத்துவக் குழுக் கூட்டம் இன்று (13) கூடிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

நாட்டின் சோளத் தேவையில் 50 சதவீதமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், ஏனையவை இறக்குமதி செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

இருப்பினும், உள்நாட்டில் சோள உற்பத்தியை அதிகரிக்கப் போதுமான சாகுபடி நிலங்கள் இல்லாத காரணத்தினால், அதற்குப் பதிலாக அரிசி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

இதற்காக வயல் நிலங்களை விரிவாக்க எதிர்பார்க்கவில்லை என்றும், விவசாயத் திணைக்களத்தின் முறையான வழிகாட்டல்களைப் பின்பற்றி விளைச்சலை அதிகரிக்குமாறும் அவர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார். 

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்: 

"நெல் அறுவடை செய்யப்பட்டவுடன் ஒரே நேரத்தில் சந்தைக்கு வருவதைத் தவிர்த்து, அதனை ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் சேமித்து வைக்கும் நிலைக்கு விவசாயிகளைக் கொண்டு வருவதே எமது இலக்கு. நெல்லை உலர்த்துவதற்கும் களஞ்சியப்படுத்துவதற்கும் ஒரு முறையை நாம் கண்டிப்பாக உருவாக்க வேண்டும். அறுவடை செய்தவுடன் விவசாயியின் பணி முடிந்துவிடுவதாகக் கருதக்கூடாது. அதனுடன் நெல்லை உலர்த்துதல் மற்றும் களஞ்சியப்படுத்துதல் ஆகிய இரு பகுதிகளும் இணைய வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்து வருகிறோம். 

எமக்கு இரண்டு முக்கிய விடயங்கள் உள்ளன. ஒன்று விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, மற்றொன்று உணவுப் பாதுகாப்பு. விவசாயிக்கு நியாயமான இலாபம் கிடைக்காவிட்டால் விவசாயத்தைச் செய்ய முடியாது. நாம் நெல் விலையை வர்த்தமானி மூலம் சட்டமாக்கவில்லை. தனியார் துறையினர் குறைந்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்வதைத் தடுப்பதே எமது நோக்கம். நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலையீடு போதுமானதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அங்கு களஞ்சியசாலை மற்றும் பணியாளர் பிரச்சினைகள் உள்ளன. 

வெள்ளப் பாதிப்புகளுக்குப் பிறகு விவசாயத்தை மீட்டெடுக்க நீண்ட காலம் எடுக்கும் என நாம் அஞ்சினோம். ஆனால், நாம் நட்டஈடு வழங்கி மீண்டும் பயிர்ச்செய்கையை ஆரம்பித்தோம். அதற்காக விவசாயிகளுக்கும், அவர்களுடன் பணியாற்றும் அரச அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். தற்போது நாம் கீரி சம்பா அரிசியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. எனவே, விவசாயிகள் கீரி சம்பாவை அதிகளவில் பயிரிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்றார்

Comments
0

MOST READ

காணொளி
70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

title