Mar 13, 2026 - 11:16 PM -
0
எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளைக் கொண்ட 'மக்கள் குரல்' அமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர், சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீரவை இன்று (13) சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பு சர்வஜன அதிகாரத்தின் பிரதான காரியாலயத்தில் நடைபெற்றது.
நாட்டில் பல நெருக்கடிகள் தலைதூக்கியுள்ள இக்காலகட்டத்தில், எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், வலுசக்தி நெருக்கடி, மத்திய கிழக்கு போர் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.
தமது தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டு, பொதுவான வேலைத்திட்டத்திற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் ஒன்று ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்றுக்கொண்ட பின்னர் பொதுவான இணக்கப்பாட்டை எட்ட எதிர்பார்ப்பதாகவும் இதில் கலந்துகொண்ட பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
