Header Logo

செய்திகள்
ஈரானிய மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் மத்தளவிலிருந்து புறப்பட்டது

Mar 13, 2026 - 11:29 PM -

0

ஈரானிய மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் மத்தளவிலிருந்து புறப்பட்டது

இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான 'IRIS DENA' கப்பலில் பலியான 84 ஈரான் மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் ஈரான் நோக்கிப் புறப்பட்டுள்ளது. 

மத்தள விமான நிலையத்திலிருந்து இன்று (13) இரவு 09.29 மணியளவில் இந்த விமானம் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், உயிரிழந்த மாலுமிகளின் உடல்களை அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

கடந்த மார்ச் மாதம் 04ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் இந்த ஈரான் கப்பல் விபத்துக்குள்ளானதுடன், அதில் சுமார் 180 பேர் இருந்தமை கண்டறியப்பட்டது. 

பின்னர் இதிலிருந்து மீட்கப்பட்ட 35 பேர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோ (Torpedo) ரக ஏவுகணை மூலம் சர்வதேச கடற்பரப்பில் வைத்து குறித்த ஈரான் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட்டர் ஹெக்செத் பின்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

title