Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிபலன் (14.03.2026)!

Mar 14, 2026 - 09:20 AM

இன்றைய ராசிபலன் (14.03.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (14) தனுசு, மகரம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று கும்பத்தில் சூரியன் - ராகு சேர்க்கை, மீனத்தில் சுக்கிரனின் உச்சம் அடைந்து சஞ்சரிக்கின்றனர். இன்று மேஷ, சிம்மம், கும்பம் ராசிக்கு நன்மை தரும். ரிஷப, மிதுனம் ராசியில் உள்ள ரோகிணி பின்பு மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. 

மேஷம் ராசி பலன் 

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசி அதிபதி செவ்வாய், சில சுப கிரகங்களுடன் சேர்ந்துள்ளதால் குடும்பத்தில் சில கசப்பான நிகழ்வுகள் நடக்கலாம். அதனால் சூழலை உணர்ந்து அனுசரித்து செல்வது நல்லது. ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது கிரகங்களின் பார்வையால் பிள்ளைகளிடமிருந்து சில ஏமாற்றமான செய்திகளை பெற நேரிடும். இன்று உங்களுக்கு நினைவில் உள்ள எந்த ஒரு வேலையும் சரியாக முடிக்க முடியும். அன்புக்குரியவர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மனநிறைவு மற்றும் அமைதி கிடைக்கக்கூடிய நாள். அரசியல் தொடர்பான நபர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல வெற்றியை தரும். தொழில், வியாபாரம் தொடர்பாக அரசாங்கத்தின் திட்டங்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்களுடைய சிறப்பான செயல்பாடுகள் அந்தஸ்து மற்றும் கௌரவத்தை அதிகரிக்கும். இன்று இரவு நேரத்தில் சில விரும்பத்தகாத நபர்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. இது நாள் தேவையற்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். உங்கள் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். 

மிதுனம் ராசி பலன் 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று ராசி அதிபதி புதன் வக்கிர நிலையில் இருப்பதால் இன்று உங்கள் மனதில் பதட்டமான நிலை இருக்கும். இன்று நீங்கள் மதிப்பு மிக்க பொருளை இழக்க நேரிடும். திருடப்பட வாய்ப்பு உண்டு. உங்கள் குழந்தைகளின் கல்வியில் அசாதாரண வெற்றி அல்லது விளையாட்டு போட்டிகளில் கிடைக்கும் முன்னேற்றம் மகிழ்ச்சியை தரும். எங்கள் நிலுவையில் உள்ள எந்த ஒரு வேலையும் சிறப்பாக முடிக்க முடியும். மாலை நேரத்தில் உங்கள் மன உற்சாகத்தை அதிகரிக்கும் விதத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு உண்டு. 

கடகம் ராசி பலன் 

கடக ராசி அன்பர்களுக்கு இன்று பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் சங்கரிப்பது உங்கள் செல்வ நிலையில் முன்னேற்றம். உங்கள் வாழ்க்கையில் எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் முன்னேற்றத்தை தரும். இன்று உங்களுக்கு அரசு மரியாதை மற்றும் கௌரவம் கிடைக்கும். குழந்தைகள் மீதான பொறுப்புகள் நிறைவேறலாம். பயணம் இனிமையாக அமையும். அதன் மூலம் மன பலமான பலன்கள் பெறுவீர்கள். இன்று மாலை நேரத்தில் உங்களுக்கு பிடித்த சில நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். 

சிம்மம் ராசி பலன் 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சமசப்தமா ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் உங்களுடைய செயல்பாடுகள் முன்னேற்றம் அடையும். குறிப்பாக சிலருடன் சேர்ந்து செய்யக் கூடிய வேலைகளுக்கு தொழிலில் புதிய ஆற்றலுடன் செயல்படுவீர்கள். அதே சமயம் இன்று உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி மென்மையான பேச்சு, உங்களுடைய போட்டியை சமாளிக்க உதவும். சூரிய பகவான் வழிபடுவது சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. கண் தொடர்பான பயிற்சிகளை செய்வது அவசியம். இன்று உங்கள் வேலை பணியிடத்தில் உங்கள் எதிரிகளை சமாளிக்க முடியும். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய நாள். வேலைவாய்ப்பு மற்றும் வணிகம் தொடர்பான துறைகளில் எடுக்கும் முயற்சிகள் நல்ல வெற்றியை தரும். இன்று உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்களாக சில முக்கிய முடிவுகளை எடுக்க நேரிடும். இது உங்கள் குழந்தைகளிடமிருந்து திருப்தியான மற்றும் இனிமையான செய்திகளை பெருவீர்கள். ஏதேனும் ஒரு சட்ட தகராறு அல்லது வழக்கு விஷயங்களில் கிடைக்கும் வெற்றி மகிழ்ச்சியை தரும். சுப செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய சூழ்நிலை இனிமையானதாக மாறும். இன்று முக்கிய வேலைகளை முடிப்பதில் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பல நாட்களாக நீடித்து வந்த பெரிய பண பரிவர்த்தனை தொடர்பான பிரச்சனைகள் தீரும். இன்று உங்கள் கையில் கணிசமான அளவு பணம் சேர்வதற்கு வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் எடுக்கும் பயணத்திட்டங்கள் நல்ல வெற்றியை தரும். காதல் உறவு ஆழமாகும். இன்று வேலை பளு காரணமாக சோர்வாக உணர்வீர்கள். 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிநாதன் மூன்று கிரகங்களுடன் சேர்ந்து இருப்பதால் ஆரோக்கியத்தை சாதகமற்ற சூழ்நிலை ஏற்படலாம். குறிப்பாக வாயு, சிறுநீரகம் மற்றும் ரத்தம் தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்பு உண்டு. ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு நல்ல மருத்துவரை அணுகுவது பெறுவது அவசியம். இன்று நாள் முழுவதும் நிறைய பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியது இருக்கும். உங்கள் ஆற்றில் சரியான விதத்தில் பயன்படுத்துவதால் எதிர்பார்த்த நல்ல வெற்றி கிடைக்கும். இது வாழ்க்கை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் செயல்பாடு மற்றும் பேச்சு கண்டு எதிரிகள் கூட இன்று உங்களை புகழ்வார்கள். அரசியலில் உள்ளவர்கள் ஆளும் கட்சியுடன் உறவு மேம்படும் மற்றும் கூட்டணி மூலம் நல்ல பலன் அடைவீர்கள். மாமியார் வீட்டாரின் மூலம் கணிசமான ஆதரவு பெறுவீர்கள். இன்று மாலை நேரத்தில் சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இன்று சில புதிய தொடக்கத்தை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. 

மகரம் ராசி பலன் 

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் குடும்பம் பொறுப்புக்கள் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். வாழ்வாதார துறையில் புதிய முயற்சிகள் நல்ல பலனை தரும். உத்தியோகத்தில் உங்களுக்கு கீழ் பணி புரியக்கூடிய நபர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று நேரத்தில் என்னவென்று தகராறு அல்லது வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் வீட்டிற்கு சில விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று உங்கள் பெற்றோரை சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டிய நாள். மனதளவில் சிறிய பதற்றம் இருந்தாலும் அதை சமாளிக்க முடியும். 

கும்பம் ராசி பலன் 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய உடல் நலம் மற்றும் நல்வாழ்வு சீர்குலைய வாய்ப்பு உண்டு. உங்கள் ராசி அதிபதி சனி நேராக நகர தொடங்கியுள்ளதால், சிலருக்கு தேவையற்ற கருத்து வேறுபாடு, பகை சந்திக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்களுக்கு சில ஏமாற்றம் அளிக்க கூடிய பாதகமான செய்திகள் தேடி வர வாய்ப்பு உண்டு. அதற்காக திடீர் பயணங்கள் செல்ல நேரிடும். பணம் மற்றும் பயணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவும். எந்த வித மோதல் மற்றும் சச்சரவுகளை தவிர்க்கவும். 

மீனம் ராசி பலன் 

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பிள்ளைகளின் செயல்பாடு தொடர்பாக கவலைப்பட நேரிடும். வேலை தொடர்பாக திட்டமிடல் அவசியம். திருமண வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்த முட்டுக்கட்டை விலகும். உங்கள் உறவினர்களுடன் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் விலகும். இன்று குடும்பத்தினருடன் நான் மிக அஸ்தலத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு.. தர்ம காரியங்களில் ஈடுபடும் ஆர்வம் உண்டாகும். பெற்றோர் மற்றும் குருவின் ஆசிர்வாதம் பெறுவது அவசியம். இன்று உங்களுடைய மதிப்புமிக்க பொருட்களையும் கவனமாக பாதுகாப்பாக வைக்கவும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

Mobitel 1278