Header Logo

செய்திகள்
லெபனான் - இஸ்ரேல் பேச்சுவார்த்தையை பரிஸில் நடத்த தயார்: பிரான்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு

Mar 14, 2026 - 07:24 PM -

0

லெபனான் - இஸ்ரேல் பேச்சுவார்த்தையை பரிஸில் நடத்த தயார்: பிரான்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு

லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை பரிஸில் நடத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க தாம் தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

தனது 'X' தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள மேக்ரான், கடந்த வெள்ளிக்கிழமை லெபனான் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் ஆகியோருடன் கலந்துரையாடியதாகவும், இதன்போது இஸ்ரேலுடன் "நேரடி பேச்சுவார்த்தைகளை" முன்னெடுக்க அவர்கள் விருப்பம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"பேச்சுவார்த்தைகள் மற்றும் போர்நிறுத்தத்தை ஆரம்பிக்கவும், நிரந்தர தீர்வை காணவும், லெபனானின் இறையாண்மைக்கு ஆதரவளிப்பதற்காக அந்நாட்டு அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற இடமளிக்கவும் இஸ்ரேல் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அந்தப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title