Header Logo

செய்திகள்
டித்வா நிவாரணப் பொருட்கள் அபகரிப்பு: 2 பெண் அதிகாரிகள் கைது

Mar 14, 2026 - 10:01 PM -

0

டித்வா நிவாரணப் பொருட்கள் அபகரிப்பு: 2 பெண் அதிகாரிகள் கைது

‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட அரநாயக்க பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தாலும் ஏனைய நிறுவனங்களாலும் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களைத் தமது வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரண்டு பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அரநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அரநாயக்க பிரதேச செயலகத்தின் களஞ்சியப் பொறுப்பாளராகவும் பணியாற்றியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலை மேலதிக மாவட்ட செயலாளர் திலித் நிஷாந்தவுக்கு கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட செயலாளர் ஜகத் எம். ஹேரத்தின் மேற்பார்வையில் மாவட்ட செயலக விசாரணை அதிகாரிகள் மற்றும் அரநாயக்க பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது, குறித்த உத்தியோகத்தர்களின் வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரண்டு பெண் உத்தியோகத்தர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதியை மதிப்பிடும் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title