Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (18.03.2026)!

Mar 18, 2026 - 09:17 AM

இன்றைய ராசிப்பலன் (18.03.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (18) கும்ப ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று சர்வ அமாவாசை, முன்னோர்களை வழிபட வேண்டிய நாள். இன்று ரிஷப, தனுசு, மீன ராசிக்கு வெற்றி தரலாம். கடகம் ராசியில் உள்ள பூசம் பின்பு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. 

மேஷம் ராசி பலன் 

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசி அதிபதியான செவ்வாய் லாப ஸ்தானமான கும்ப ராசியில் சிந்து இருப்பதாக உங்களுடைய வருமானம் மற்றும் சமூக அந்தஸ்து அதிகரிக்கும். இன்று சில சிறப்பான செயல்களை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுடைய பொருளாதாரம் மற்றும் புதிய தொடர்புகளை மேம்படுத்தும் விஷயங்களில் ஆர்வம் கட்டுவீர்கள். உங்களுடைய உலகில் கண்ணோட்டம் சற்று மாறுபட வாய்ப்பு உண்டு. சரியான திட்டமிடலுடன் உங்களுடைய பணிகளை மிகுந்த கவனத்துடன் செய்வது நல்லது. இது உங்களுடைய சுய மதிப்பை மேம்படுத்தும். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சுக்கிரன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருப்பது உங்களுக்கு பலவிதத்தில் லாபம் சேரக்கூடியதாக இருக்கும். மேலும் சுக்கிரனின் சுப பார்வையானது சத்ரு ஸ்தானமான ஆரம் வீட்டில் மீது விழுவது நாள் உங்களுக்கு எதிரிகளின் தொல்லை விலகும். அரசு சார்ந்த கௌரவம், புகழ் கிடைக்க வாய்ப்பு உண்டு. செல்வம் சேரக்கூடிய நாள். அதே போல லாப ஸ்தானத்தில் சூரியன் சந்திரன், சுக்கிரனின் நினைவு உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் அமைதியை அளிப்பார்கள். புதிய தொழில் கூட்டனைகள் உருவாகும் நல்ல வாய்ப்பு உண்டு. 

மிதுனம் ராசி பலன் 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று அதிபதியான புதன் பகவான் கும்ப ராசியில் சந்திப்பதால் உங்களுடைய அதிர்ஷ்டமும், வேலையில் உங்களுடைய முயற்சியும் முன்னேற்றம் அடையும். ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் நாட்டம் அதிகரிக்கும். இதன் விளைவாக உங்களுக்கு பரபரப்பு நிறைந்த நாளாக இருந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். இன்று பதற்றம் மற்றும் கவலைகளை விடுத்து முயற்சிகளில் கவனம் செலுத்தவும். உங்கள் மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். வீட்டிற்கு விருந்தினர்கள் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். 

கடகம் ராசி பலன் 

கடக ராசி அன்பர்களுக்கு இன்று ராசி அதிபதி சந்திர பகவான் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், கும்ப பல கிரகங்களுடன் சேர்ந்து வசிப்பதால் உங்களுடைய செயல்பாடுகளால் பெரிய அளவில் செல்வம் சேரும். இன்று உங்கள் பிள்ளைகளிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். குடும்பத்திலும் பணியிடத்திலும் இணக்கமான சூழல் உருவாக்கக்கூடிய நாள். நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் நிலைமையில் இருந்த பணிகளை முடிக்க முடியும். அதனால் மன கிடைக்கும். சில நாட்களாக நடைபெற்ற வேலைகள் முடிக்க முடியும். 

சிம்மம் ராசி பலன் 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசி அதிபதி ஆனா சூரிய பகவான் மீன ராசியில் சுக்கிரன் சந்திரன், சனி ஆகிய கிரகங்களுடன் சேர்ந்து சந்திக்கிறார். அவர்களின் பார்வை நோய், எதிரி ஸ்தானத்தின் மீது விழுவதால் உங்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படுவதோடு, எதிரிகள் மூலம் ஏற்படும் தொல்லையும் விலகும். சப்தமஸ்தானத்தில் புதன் பகவானின் சஞ்சாரம் நடப்பதால் உங்களுடைய துணை மற்றும் கூட்டாளிகளின் ஆதரவு அதிகரிக்கும். அதனால் நீங்கள் செய்யும் வணிகம் அல்லது தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுடைய இனிமையான பேச்சு செயல்பாடு மக்களின் மனதை வெல்ல உதவும். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள். குறிப்பாக பலரும் உங்களுக்கு உதவ வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் விவேகத்துடன் செயல்படுவதும், கவனமாக முடிவெடுப்பதும் மரியாதை பெற்று தருவதோடு, எதிர்காலத்தில் நல்ல பலனை தரும். உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பாக நிதானத்தை கடைபிடிக்கவும். தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் சச்சரவுகளை தவிர்க்க வேண்டிய நாள். இன்று இன்று வேலை தொடர்பான நிச்சயமற்ற தன்மை சற்று சங்கடத்தை தர வாய்ப்பு உண்டு. 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று ராசி அதிபதி சுக்கிர பகவான் சஞ்சாரம் உங்களுடைய பணிகளை மேம்படுத்தும். எதிரிகளை சிறப்பாக கையாள முடியும். இன்று நீங்கள் செய்யக்கூடிய சுப செலவாகும் மனநிறைவை தரும். மேலும் சுக்கிரனுடன் பல கிரகங்கள் சேர்ந்து சஞ்சரிப்பதால் உங்களுடைய செல்வம் மற்றும் பொழிவு அதிகரிக்கும். இன்று நெருங்கிய நண்பர்களின் ஆலோசனை உங்கள் வாழ்க்கையை உயர்வை தரக்கூடியதாக அமையும். இன்று எந்தவித அவசர முடிவுகளையும் தவிர்ப்பது அவசியம். உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சாதகமான நாளாக அமையும். 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று ஆளும் கிரகம் செவ்வாய் பகவான் சுக ஸ்தானமான கும்ப ராசியில் சஞ்சரிப்பது உங்களுக்கு முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். வீட்டின் தேவைகளை எளிதாக சமாளிக்க முடியும். இன்று சந்திரன் பல கிரகங்களுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் உங்களுடைய வெற்றி மற்றும் மரியாதையை அதிகரிக்கும். வேலை தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். இன்று சில முக்கிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பும், நிபுணர்களின் ஆலோசனை உங்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு மகிழ்ச்சியும் இன்பமும் நிறைந்த நாட்கள் வரவிருக்கின்றன. 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குரு பகவானின் அமைப்பு சப்தம ஸ்தானத்தில் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். குருவின் பார்வையால் கணிசமான தனவரவு ஏற்படும். உங்களுடைய குடும்பம் பொருளாதார நிலை மேம்படும். இன்று எந்தவித பிரச்சினைகளையும் எளிதாக பேசி தீர்க்க முடியும். உங்கள் வேலையில் சில நாட்களாக நீடித்த பிரச்சினைகளை எளிதாக சமாளிப்பீர்கள். இன்று உங்களுடைய நேர்மையான செயல்பாடு நல்ல பலனையும் மதிப்பையும் அதிகரிக்கும். கடந்த கால இனிமையான அனுபவங்கள் மனதை இலகுவாக்கும். 

மகரம் ராசி பலன் 

மகர ராசி அன்பர்களுக்கு இன்று ராசிநாதன் சனி பகவான் மூன்றாம் வீட்டில் சந்திரனுடன் சேர்ந்து செஞ்சரிப்பதால் உங்களுடைய வேலைப்பளு சற்று அதிகரிக்க வாய்ப்பு உண்டு. வியாபாரம் தொடர்பாக இந்த ஒரு முடிவு மற்றும் செயல்களை கவனமாக செய்வது நல்லது. மேலும் உங்கள் முக்கிய வேலைக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியம். இன்று மதியத்திற்கு சில நல்ல தகவல்கள் தேடி வரும். சிறிய வேலைகளை முடித்து மகிழ்வீர்கள். இன்று உங்கள் நேரத்தை சரியாக திட்டமிட வேண்டிய நாள். 

கும்பம் ராசி பலன் 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ராசியில் புதன் செவ்வாய் ராகு என மூன்று கிரகங்களின் சேர்க்கை நடக்கிறது. இன்று உங்கள் முயற்சிகளில் முன்னேற்றமும் அதிர்ஷ்டம் தரக்கூடிய பலன் கிடைக்கும். செல்வம் வேலை மற்றும் புகழ் அதிகரிக்க கூடிய நாள். எதிரிகள் தொடர்பான கவலை விலகும். புகழ் கிடைக்கக்கூடிய நாள். இன்று மங்களகரமான விஷயங்கள் நடக்கும். இன்று சிலருடன் விவாதிப்பதன் மூலம் உங்களுடைய அறிவாற்றல் மேம்படும். இன்று எந்த ஒரு செயலையும் ஆற்றல் மற்றும் உபயோகத்துடன் செய்து முடிப்பீர்கள். 

மீனம் ராசி பலன் 

மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஆனால் குருவின் அமைப்பாளர் உங்களுக்கு வலிமை மற்றும் நல்ல பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு. உங்களுடைய ஆசைகள் நிறைவேற கூடிய நாள். உங்கள் வீட்டில் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் ஏற்படும். இன்று நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் அனுகூலமான பலனை தரும். இன்று நண்பர்கள் மற்றும் உறவினர்களே சந்திக்கும் வாய்ப்பு மனமகிழ்ச்சி தரும்.. கடந்த கால இனிமையான அனுபவங்கள் மனதில் உற்சாகத்தை அதிகரிக்கும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

Mobitel 1278