Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (20.03.2026)!

Mar 20, 2026 - 09:25 AM

இன்றைய ராசிப்பலன் (20.03.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (20) சந்திரன், மீன ராசியில் இரவும் பகலுமாக சஞ்சாரம் செய்கிறார். இதன் விளைவாக் சந்திரன் மற்றும் குருவுக்கும் இடையே சிறப்பு தொடர்பு உண்டாகிறது. இதன் தாக்கம், வலிமையான கஜகேசரி யோகம் உருவாக காரணமாக அமைகிறது. இன்று காணப்படும் இந்த சிறப்பு யோகத்துடன் சர்வார்த்த சித்தி யோகம், அர்த்த சித்தி யோகமும் இணைய, அனைத்து ராசியினருக்கும் தனித்துவமான பலன்களை கொண்டு வருகிறது. 

மேஷம் 

​மேஷ ராசியில் பிறந்தவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு பெறுவார்கள். காதல் வாழ்க்கை, மண வாழ்க்கை இரண்டிலும் நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவை எடுக்க வேண்டி இருக்கும். மூன்றாம் நபரை நம்பி காரியத்தில் இறங்காதீர்கள். எச்சரிக்கையாக செயல்படுங்கள். 

ரிஷபம் 

வெளிப்படையான உரையாடல் தேவைப்படும் ஒரு நாள். காதல் உறவை வலுப்படுத்த சிறிதளவு மெனக்கெட வேண்டி இருக்கும். ஏற்கனவே திருமணம் முடித்தவர்கள், தங்கள் வாழ்க்கை துணையுடன் போதுமான நேரத்தை செலவிட வேண்டி இருக்கும். வரவு - செலவு விஷயங்களில் சிறப்பான திட்டமிடல் அவசியமாகும். உடல் நலனில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. 

மிதுனம் 

உங்கள் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் எதிர்பார்த்த மாற்றத்தை கொண்டு வரலாம்; முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவும் இருக்கும். தொழில் வளர்ச்சி தொடர்பான விஷயங்களில் உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். அலுவலக பணி மேற்கொண்டு வரும் நபர்கள், உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவார்கள். உங்கள் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பு அளித்து செயல்பட வேண்டி இருக்கும். நிதானம், பொறுமை இரண்டும் இன்றைய தினம் உங்களுக்கு அதிகம் தேவைப்படும். 

கடகம் 

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். இன்று கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணியிடத்தில் அலைச்சல் நிறைந்திருக்கும், அலைச்சலுக்கு மத்தியில் போதுமான நேரம் ஓய்வு எடுக்க மறக்காதீர்கள். பண விஷயத்தில் அவசர முடிவுகள் கூடாது, பதற்றத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்மறையான விளைவுகளை கொண்டு வரலாம். எனவே, எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. 

சிம்மம் 

ஆற்றல் மிக்க சிம்ம ராசியினர், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணும் வாய்ப்பு காணப்படுகிறது. நாள்பட்ட நோய் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட நபர்கள், சற்று நிவாரணம் காணும் ஒரு தினமாக இன்று இருக்கும். உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள், செரிமானத்தை பாதிக்கும் கடின உணவுகள் கூடாது. குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தொழில் வாழ்க்கைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அளித்திடுங்கள். 

கன்னி 

​கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று உறவில் முரண்பாடு உண்டாகும் ஒரு தினமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகலாம், உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் காணப்படும் சிக்கல், மருத்துவ செலவுகளை அதிகரிக்கலாம். குழந்தைகளின் கல்வி நோக்கத்திற்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். பண விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. எச்சரிக்கையுடன் செயல்பட, எதிர்பார்த்த மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கொண்டு வரலாம். 

துலாம் 

மன அழுத்தம் குறையும், நிம்மதியான எதிர்காலம் காணும் வாய்ப்பும் கிடைக்கும். சந்திரனின் சாதகமான பார்வை, உங்கள் தொழில் வாழ்க்கையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பை கொண்டு வரும். புதிய வாய்ப்புகளில் வெற்றி கண்டு, துறையில் உயர்ந்த இடத்தை அடைவார்கள். உலோகம் சார்ந்த தொழில் செய்து வரும் நபர்கள், தங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்வார்கள். தொழில் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிற்கும் இடையே ஆரோக்கிய சமநிலையை உண்டாகும் வாய்ப்பும் கிடைக்கும். 

விருச்சிகம் 

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய ஒரு தினமாக இன்று காணப்படுகிறது. குறிப்பாக பண விஷயத்தில் ஆழ்ந்து சிந்தித்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். பணியிடத்தில் காணப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும், சக ஊழியர்களின் முழுமையான ஆதரவும் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவு கிடைக்கும் நிலையிலும், முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர் உங்கள் அனுபவத்தை நம்புவது நல்லது. 

தனுசு 

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கற்றலுக்கான ஒரு தினமாக இருக்கும். புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை பெறலாம்; தொழில் முறை பயணங்கள் பல செய்ய வேண்டி இருக்கும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு அனுபவ பாடம் கற்றுத் தரும். பொருளாதார ரீதியாக உங்களை பக்குவப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். சேமிக்கும் பழக்கம் கொண்டவர்கள், தங்கள் எதிர்காலத்தை பிரகாசமாக மாற்றும் முதலீட்டு திட்டங்களில் கவனம் செலுத்தும் வாய்ப்பு காணப்படுகிறது. 

மகரம் 

தொழில் வளர்ச்சி காணும் நாளாக மகர ராசியினருக்கு இன்றைய தினம் அமையும். கடந்த சில தினங்களாக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் இருந்த பணிகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பினை பெறுவீர்கள், பணிகளை விரைவாக முடிக்கும் வாய்ப்பினையும் பெறுவீர்கள். உங்கள் அன்புக்கு உரியவர்களின் ஆதரவு பெறுவீர்கள். காதல் உறவில் இருக்கும் நபர்கள், பெற்றோர் அனுமதியுடன் விரைவில் திருமணத்தை முடிக்கும் வாய்ப்பு காண்பீர்கள். 

கும்பம் 

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு, பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் ஒரு தினமாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட பிரச்சனைகளுக்கு சக ஊழியர்களின் ஆதரவுடன் தீர்வு காண்பீர்கள். பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் நபர்கள், வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் காணப்படுகிறது. இதனிடையே சிறிய நிதி சிக்கல் ஏற்படலாம், இருப்பினும் இறுதியில் சூழ்நிலைகள் உங்களுக்கு ஏற்றப்படி மாறும். வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 

மீனம் 

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்று சாதகமான ஒரு தினமாக இருக்கும். குறிப்பாக, காதல் வாழ்க்கையில் எதிர்பார்த்த திருப்பங்களை காணலாம். மண வாழ்க்கையில் காணப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பெற்றோர் ஆதரவுடன் உங்கள் விருப்பமான பணிகளை தொடங்கும் வாய்ப்பும் கிடைக்கும். கலைத்துறையில் இருக்கும் நபர்கள், தங்கள் திறமைகளை நிரூபிக்கும் வாய்ப்பினை பெறுவார்கள். வாழ்க்கை துணையின் முழுமையான ஆதரவு கிடைக்க, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை லட்சியங்களை நோக்கி பயணிக்கும் வாய்ப்பும் உங்களுக்கு இன்று கிடைக்கும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

Mobitel 1278