Header Logo

இந்தியா
ஓடும் ரயில்கள் மீது கல்வீசினால் 10 ஆண்டுகள் சிறை!

Mar 23, 2026 - 01:11 PM -

0

ஓடும் ரயில்கள் மீது கல்வீசினால் 10 ஆண்டுகள் சிறை!

ஓடும் ரயில்கள் மீது கல்வீசினால் 10 ஆண்டுகள் சிறை என தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வௌியிட்டு இருக்கிறது. 

இந்தியாவின் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 

ரயில் மீது கல் வீசுவது போன்ற சட்டவிரோத செயல்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதோடு, ரயில்வே ஊழியர்களுக்கு ஆபத்தையும், பொதுச்சொத்துகளுக்கு சேதத்தையும், ரெயில் சேவையில் இடையூறுகளையும் ஏற்படுத்துகின்றன. 

ஓடும் ரெயில் மீது வீசப்படும் கற்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருக்கும் பயணிகள், குழந்தைகள், முதியவர்களுக்கு காயங்களையும், உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். 

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ரெயில்வே சட்டம் 1989 பிரிவு 152-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். பிரிவு 154-ன் படி பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். 

சென்னை கோட்டத்தின் முக்கியமான மற்றும் பதற்றமான பகுதிகளில் ரெயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரெயில்வே பொலிஸார் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர். குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு கேமரா மற்றும் இதர நவீன கண்காணிப்பு முறைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. 

ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் சந்தே கத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் நடந்தால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் உடனடியாக ரயில்வே உதவி எண் 139-க்கு தொடப்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

நூற்றாண்டு விழாவை  முன்னிட்டு விசேட நடைபவனி

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விசேட நடைபவனி

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

title