Mar 24, 2026 - 12:09 PM
By யாழ். நிருபர் பிரதீபன்
By யாழ். நிருபர் பிரதீபன்
வெளி மாவட்டங்களில் சேவையாற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஆசிரியர்கள், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று (24) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வடக்கின் ஏனைய மாவட்டங்களில் கடந்த 9 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், 7 வருடங்களில் வழங்க வேண்டிய இடமாற்றங்கள் 9 வருடங்களைத் தாண்டியும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே, ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து ஆசிரிய பிரதிநிதிகள் சிலர் வடக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

































