Mar 24, 2026 - 08:10 PM -
0
மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக, உள்நாட்டு எரிபொருள் விநியோகம் மற்றும் எரிசக்தி ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தேசிய எரிசக்தி அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள நிறைவேற்று உத்தரவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்,
மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள் மற்றும் அதன் விளைவாக நாட்டின் எரிசக்தி விநியோகத்தின் இருப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள உடனடி ஆபத்தைக் கருத்திற்கொண்டு, இதன் மூலம் தேசிய எரிசக்தி அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
