Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (27.3.2026)!

Mar 27, 2026 - 09:13 AM

இன்றைய ராசிப்பலன் (27.3.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (27) மிதுன ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மிதுனத்தில் குரு - சந்திரன் சேர்க்கை தொடர்ந்து, கடகத்தில் சந்திரன் நுழைய உள்ளார். இன்று கட்கம், மீன ராசிக்கு நன்மை தரும். விருச்சிகம், தனுசு ராசியில் உள்ள கேட்டை பின் மூலம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. 

மேஷம் ராசி பலன் 

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பணம், வங்கி தொடர்பான நடவடிக்கைகள் சிந்தனை உடன் அணுகவும். இன்று நண்பர்களின் ஆதரவு உங்கள் மன வலிமையை அதிகரிக்கும். இன்று உங்களுடைய நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மாலைப் பொழுதை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கழிப்பீர்கள். இன்று உங்கள் வேலையை செய்து முடிப்பதில் சற்று தெளிவற்றதாகவோ அல்லது கலக்கமான மனநிலையுடன் செயல்படுவீர்கள். இன்று உங்கள் கருத்துக்களை பிறரிடம் திணிக்க வேண்டாம். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக உங்களுக்கு அமையும். எந்த ஒரு அவசர சூழலையும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். இன்று உங்கள் முடிவெடுக்கும் திறன் பெரிய அளவில் கை கொடுக்கும். நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் சிறப்பாக நிறைவேற்ற முடியும். இது ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்துவது அல்லது முதலீடு செய்யும் விஷயத்தில் சாதகமான சூழல் உருவாகும். இது எதிர்காலத்தில் பெரிய அளவில் உங்களுக்கு நன்மைகளை தரும். மாலை நேரத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இன்று புதிய யோசனைகளும் மனதில் உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். 

மிதுனம் ராசி பலன் 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உடல் நலம் தொடர்பான அவதிகள் சற்று அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அது தொடர்பாக சரியான மருத்துவரை அணுக வேண்டிய நாள். உங்கள் சமூக செயல்பாடுகளில் சில தடங்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்ப்பாராத சில ஆதாயங்கள் ஏற்படும். ஆன்மீகத்தின் மீதான ஈடுபாடு வலுவடையும். உங்கள் குழந்தைகளிடமிருந்து உற்சாகமான சில செய்திகள் பெறுவீர்கள். மாலை நேரத்தில் உங்களுக்கு பிடிக்குமான விஷயங்களை செய்வது, மற்றும் பாடல் தொடர்பாக ஆர்வமாக ஈடுபடுபவர்கள். குடும்பத்தினருடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். 

கடகம் ராசி பலன் 

கடக ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு பெரிய அளவில் கை படுத்தக் கூடிய நாளாக இருக்கும். இன்று உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல பலனை பெறலாம். உங்கள் குழந்தைகள் மீதான நம்பிக்கை வலுவடையும். தாய் வழி உறவினர்களிடமிருந்து அன்பு மற்றும் சிறப்பான ஆதரவு பெற வாய்ப்பு உள்ளது. இன்று சில சொந்த ஆடம்பரத்திற்காக அதிகளவில் பணம் செலவிடுவீர்கள். உங்கள் எதிரிகள் கூட பொறாமைப்படும் விதத்தில் உங்களுடைய செயல்பாடு சிறப்பாக இருக்கும். பெற்றோரின் நலனில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நாள். அவர்களின் அன்பு ஆசிர்வாதத்தை பெறுவீர்கள். 

சிம்மம் ராசி பலன் 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். மன அமைதியின்மை சோகம் மற்றும் ஒரு வித சோர்வு உங்கள் கவனத்தை சிதறடிக்க வாய்ப்பு உண்டு. நாளின் பிற்பகுதியில் பெற்றோரின் அன்பும் ஆசிர்வாதமும் உங்களுக்கு நிம்மதியை தர வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் மாமனார் - மாமியாரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் இனிமையான பேச்சு குடும்பம் மற்றும் பணியிடத்தில் உறவை மேம்படுத்தும். இன்று சிலருக்கு கண் தொடர்பான ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மன உறுதி அதிகரிக்கும். உங்கள் கடினமான பணிகளை துணிச்சலான செயல்பாடுகளால் வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்கள் பெற்றோரிடமிருந்து போதுமான ஆதரவு மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும். சிலருக்கு உடல் நலக்குறைவு காரணமாக மன வருத்தம் ஏற்படும். இன்று தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் நோக்கம் நிறைவேற வாய்ப்பு உண்டு. தொழில் தொடர்பாக முன்னேற்றமும் பொருளாதார ரீதியான ஆதாயங்களும் கிடைக்கும். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் சுப பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். இன்று உங்களுடைய அதிகாரம் மற்றும் செல்வம் பெருகும். மற்றவர்களின் நலனை பற்றி சிந்திப்பீர்கள். அவர்களுக்கு முழு மனதுடன் சேவை செய்வீர்கள். உங்களுடைய வருமானம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும். இன்று குரு, பெற்றோரிடம் முழுமையான பக்தி மற்றும் விசுவாசத்தை பேண வாய்ப்பு உண்டு. புதிய தொழில் முதலீடு செய்ய உங்களுக்கு லாபம் தரக்கூடிய பலன்கள் கிடைக்கும். 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மனம் அமைதியாற்றதாக கலக்கத்துடன் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகள் சற்று பலனளிக்காமல் போக வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய பொறுமை மற்றும் சாமர்த்தியமான செயல்பாடுகளால் எதிரிகளை தோற்கடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் தகராறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.. விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். கடுமையான சூழலாக இருந்தாலும் முயற்சி கைவிடாதீர்கள். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய கற்றல், ஞானம் மற்றும் அறிவு திறன் அதிகரிக்க கூடிய நாள். உங்களுடைய தர்ம சிந்தனை மற்றும் பரோபகார குணம் வளர வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் ஆன்மீக சடங்குகளில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு முழு ஆதரவை தரும். நிதிநிலைமை வலுவடைய வாய்ப்பு உண்டு. சிலருக்கு வயது தொடர்பான கோளாறுகள் சங்கடத்தை தரும். உணவு பழக்கத்தில் கவனம் செலுத்தவும். 

மகரம் ராசி பலன் 

மகர ராசி அன்பர்களுக்கு இன்று இன்று ஏதேனும் மதிப்புமிக்க பொருளை வாங்குவது அல்லது தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடும். மாமியார் வீட்டாரின் ஆதரவு மற்றும் மரியாதை கிடைக்கும். உங்கள் வியாபாரத்தில் புதிய விஷயங்களை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிதாக ஏதாவது முதலீடு செய்ய வேண்டியது இருந்தால் அது எதிர்காலத்தில் நன்மையை தரும். இன்று புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். வாழ்க்கையில் பிறத்தன்மை மற்றும் வசதி அதிகரிக்க வாய்ப்பு உண்டு. 

கும்பம் ராசி பலன் 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று இன்று ஞானத்துடன் விவேகத்துடன் செய்யக்கூடிய எந்த ஒரு செயல் நன்மை தரும். உங்கள் செலவுகளை குறைக்க உதவும். இன்று தேவையான அளவு மட்டும் எதையும் வாங்குவோம். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சில ஆதரவற்ற சூழல் ஏற்படும். இன்று உலக இன்பங்களை அனுபவிக்க செலவுகள் அதிகரிக்கும். இன்று எங்கள் மேற்கொள்ளும் சிறிய பயணங்கள் நன்மை தரக்கூடியதாக அமையும். உங்கள் பொறுப்புக்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உங்களுடைய நிதி நிலை மற்றும் உறவுகளை நிர்வகிப்பதில் அதிக நேரம் செலவிடுவீர்கள். 

மீனம் ராசி பலன் 

மீன ராசி அன்பர்களுக்கு இன்று குருவின் அமைப்பு உங்களுடைய பிள்ளைகளுடன் நிறைவேற்ற கருத்து வேறுபாடுகளை தீர்க்க உதவும். விட்டுக் கொடுத்து செல்லும் குணம் மற்றவர்களுடன் உறவையும் மேம்படுத்தும். இன்று உங்களுக்கு கிடைக்கும் சமூக அங்கீகாரம் மன உறுதி தரும். அன்புக்குரியவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் வேடிக்கை மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலையை அனுபவிப்பீர்கள். இன்று பொறாமை குணத்துடன் செயல்பட வேண்டாம். உங்கள் கடின உழைப்பிற்கான பலன் வருங்காலத்தில் கிடைக்கும். அதற்கான அங்கீகாரமும் பெறுவீர்கள்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

Mobitel 1278