Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
உடல் வெளிப்படுத்தும் எச்சரிக்கை அறிகுறிகள்!

Mar 27, 2026 - 02:39 PM

உடல் வெளிப்படுத்தும் எச்சரிக்கை அறிகுறிகள்!
Mobitel Inner 1278

தினசரி வாழ்வில் சிறிய அறிகுறிகள் மூலம் நம் உடல் பல விஷயங்களை எச்சரிக்கிறது. அவற்றை கவனமாக புரிந்துகொண்டால் பல உடல்நலப் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். அப்படி உடலில் தோன்றும் சில பொதுவான அறிகுறிகள் என்ன சொல்கின்றன என்பதை பார்ப்போம். 

அடிக்கடி கொட்டாவி 

அடிக்கடி கொட்டாவி விடுவது, உடலுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் தூக்கக் குறைபாடும், அதிக சோர்வும் கொட்டாவி எழுவதற்கு காரணமாக இருக்கலாம். 

வாய் துர்நாற்றம் 

இது பெரும்பாலும் வாய் சுகாதார குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. சில நேரங்களில் அஜீரணம் அல்லது வயிற்று பிரச்சனைகள் காரணமாகவும் வாய் துர்நாற்றம் உண்டாகலாம். 

விரல்கள் மரத்துப்போதல் 

விரல்கள் மரத்துப்போவது நரம்பு செயல்பாட்டில் மாற்றம் இருப்பதைக் காட்டுகிறது. வைட்டமின் பி12 குறைபாடு இருந்தாலும் இந்த அறிகுறி தோன்றும். 

எப்போதும் சோர்வு 

எப்போதும் சோர்வாக இருப்பது வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறியாகும். சூரிய ஒளியில் சில நிமிடங்கள் செலவிடுவது, சத்தான உணவு உண்பது சோர்வை விரட்ட உதவிடும். தொடர்ந்து சோர்வு நீடித்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானது. 

அதிக முடி உதிர்வு 

உடலில் இரும்புச்சத்து குறைவதால் முடி பலவீனமடைந்து அதிகமாக உதிரக்கூடும். இரும்புச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்வதும், தேவையான சிகிச்சை முறையும் முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும். 

மஞ்சள் நிற கண்கள் 

கண்களின் வெள்ளைப்பகுதி மஞ்சளாக மாறுவது மஞ்சள் காமாலை நோயின் அறிகுறியாகும். இது பெரும்பாலும் ஈரல் செயல்பாட்டில் பிரச்சனை இருப்பதை சுட்டிக்காட்டும். 

வாசனை தெரியாமல் போவது 

சில நேரங்களில் வாசனை உணரும் திறன் குறைவது உடலில் துத்தநாகம் சத்து குறைவாக இருப்பதைக் காட்டுகிறது. ஆனால் சளி அல்லது நோய்த்தொற்றுகளாலும் இது ஏற்படலாம். 

காதில் ரீங்கார சத்தம் 

அடிக்கடி காதில் ரீங்கார சத்தம் கேட்பது சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். இது நீண்ட காலம் தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. 

வீக்கமான கால்கள் 

கால்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படுவது உடலில் நீர் தேக்கம் இருப்பதை சுட்டிக்காட்டலாம். சில சமயங்களில் இதயம் அல்லது சிறுநீரக பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். உடனடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது. 

ஈறுகளில் ரத்தக்கசிவு 

பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது வைட்டமின் சி குறைபாட்டின் அறிகுறியாகும். பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் உட்கொள்வது அவசியம்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278