Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
விஜய்யிடம் இத்தனை கோடி சொத்துக்களா?

Mar 30, 2026 - 06:50 PM

விஜய்யிடம் இத்தனை கோடி சொத்துக்களா?
Mobitel Inner 1278

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு அழைத்தும் செல்லாத விஜய், 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறார். நேற்று (29) ஒரே மேடையில் 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அவர் அறிமுகம் செய்தார். 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இன்று (30) ஒரே நாளில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் நடிகரும், தவெக தலைவருமான விஜய், காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்யின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. அதாவது விஜய்யுடன் இருக்கும் அசையும் சொத்து மதிப்பு 404 கோடி ரூபா ஆகும். அசையா சொத்து மதிப்பு 115 கோடி ரூபா ஆகும் என விஜய் தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

பூர்வீக சொத்தின் மதிப்பு 21.83 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தன்னிடம் 1.20 கோடி ரூபா மதிப்பில் 883 கிராம் தங்கம் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். 2 பிஎம்டபிள்யு, லெக்சஸ், டோயட்டோ வெல்பயர் உள்ளிட்ட கார்கள் சொந்தமாக இருப்பதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். 

விஜய் மனைவி சங்கீதாவிடம் 4.07 கோடி ரூபாயில் 3,132 கிராம் தங்கம், 1 கோடி ரூபா மதிப்பில் 134.91 காரட் வைரம் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யின் அசையா சொத்து மதிப்பின் நடப்பு சந்தை 220 கோடி ரூபா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் அசையா சொத்துகளை பொறுத்தவரை நீலாங்கரையில் உள்ள பங்களா, பனையூர் இல்லம், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் என உள்ளன. 

அசையும் சொத்துகளை பொறுத்தவரை வங்கி வைப்புத் தொகை, பங்குகள் மற்றும் நிறுவன முதலீடுகள் உள்ளன. கடந்த நிதி ஆண்டில் சுமார் ரூபா 120 கோடி முதல் ரூபா 150 கோடி வரை வருமானம் ஈட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட கடன்கள் அல்லது வங்கிக் கடன்கள் ஏதும் இல்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன. விஜய்யிடம் Rolls Royce Ghost, BMW, Audi போன்ற சொகுசு கார்களும் நிறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு அழைத்தும் செல்லாத விஜய், 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறார். நேற்று ஒரே மேடையில் 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அவர் அறிமுகம் செய்தார். நான் ஏற்கெனவே கூறியபடி விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் தி.நகர் தொகுதியிலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியிலும், செங்கோட்டையன் கோபிச்ச்செட்டிபாளையம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

பாமக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் விஜய் தனது நீண்டகால ஓட்டுநர் மற்றும் உதவியாளரான ராஜேந்திரனின் மகன் சபரிநாதனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது பேசுபொருளானது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278