Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து!

Apr 6, 2026 - 04:22 PM

பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து!
Mobitel Inner 1278

அமெரிக்காவின் SpaceX மற்றும் Reflect Orbital ஆகிய நிறுவனங்களின் புதிய விண்வெளித் திட்டங்களுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்கள், இங்கே, 

விண்வெளியில் தரவு மையங்களை (Data Centers) அமைக்க SpaceX நிறுவனம் 10 லட்சம் செயற்கைக்கோள்களை ஏவத் திட்டமிட்டுள்ளது. அதேபோல், சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் வகையில் கண்ணாடி செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த Reflect Orbital நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

தற்போதைக்கு கண்ணாடி செயற்கைக்கோள்களை பயன்படுத்தி இரவில் பூமியின் சில பகுதிகளை ஒளிரச் செய்வதற்கான திட்டங்களை Reflect Orbital என்ற நிறுவனம் முன்வைத்துள்ளது. அதேபோல, புவியின் தாழ் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்ணப்பங்களை கொடுத்துள்ளது. இந்த இரண்டையும் அமெரிக்காவின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிசீலித்து வருகிறது. 

ஆனால் இந்தத் திட்டங்கள் இரண்டுமே இயற்கை சுழற்சி சிதைந்து அனைத்து உயிரினங்களையும் கடுமையாக பாதிக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக மனிதர்களின் உடல்நலன் பாதிக்கப்படுவதுடன், தூக்கம் போன்ற இயல்பான விஷயங்களும் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 30 நாடுகளைச் சேர்ந்த 2,500 விஞ்ஞானிகள் அமெரிக்க தகவல் தொடர்பு ஆணையத்திற்கு (FCC) எதிர்ப்புத் கடிதம் எழுதியுள்ளனர். 

Reflect Orbital திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்? இயற்கையான இரவு நேர ஒளிச்சூழலில் இதனால் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இப்படி இயல்பான ஒளி-இருள் சுழற்சியை மாற்றுவது, மனிதர்கள் மற்றும் விலங்குகளில் உறக்கம் மற்றும் ஹார்மோன் சுரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி, உயிரியல் கடிகாரங்களையும், இரவு நேர உயிரினங்களின் இடப்பெயர்ச்சியையும், தாவரங்களின் பருவகால சுழற்சிகளையும், கடல் உணவு வலைகளுக்கு ஆதாரமாக விளங்கும் கடல் பைட்டோபிளாங்க்டன்களின் தாளங்களையும் சீர்குலைக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

ஸ்பேஸ் - எக்ஸ் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்? வானில் லட்சக்கணக்கான செயற்கைக்கோள்கள் உலா வரும்போது, அவை நட்சத்திரங்களை விடப் பிரகாசமாகத் தெரியும். இதனால் தொலைநோக்கிகள் மூலம் விண்வெளியை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளின் பணி முற்றிலும் பாதிக்கப்படும். மேலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்களை ஏவும்போது வளிமண்டலத்தில் அதிகப்படியான அலுமினியம் ஆக்சைடு சேரும். இது ஓசோன் படலத்தைச் சிதைத்து, பருவநிலை மாற்றத்தை மோசமாக்கும். அத்துடன் விண்வெளியில் மோதல்கள் ஏற்பட்டு, விண்வெளி குப்பைகள் அதிகரிப்பதற்கும் இது காரணமாக அமையும் என அஞ்சப்படுகிறது. 

ஒளி - இருள் சுழற்சியை மாற்றுவது, மனிதர்கள் மற்றும் விலங்குகளில் உறக்கம் மற்றும் ஹார்மோன் சுரப்பை ஒழுங்குபடுத்தும் உயிரியல் கடிகாரங்களையும், இரவு நேர உயிரினங்களின் இடப்பெயர்ச்சியையும், தாவரங்களின் பருவகால சுழற்சிகளையும், கடல் உணவு வலைகளுக்கு ஆதாரமாக விளங்கும் கடல் பைட்டோபிளாங்க்டன்களின் தாளங்களையும் சீர்குலைக்கக்கூடும் என்று அவர்கள் கூறினர். இவற்றை கருத்தில் கொண்டு, பெரும் ஆபத்து வராமல் இருக்க விஞ்ஞானிகள் முக்கிய முடிவை விரைவில் எடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278