Apr 23, 2026 - 05:44 PM -
0
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மாலை 5.00 மணி நிலவரப்படி 82.24% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக கரூரில் 89.32% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 73.44% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தலைநகர் சென்னையில் மாலை 5.00 மணி நிலவரப்படி 81.34% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இவற்றில் தொகுதி வாரியாகப் பார்த்தால் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் அதிகபட்சமாக 87.12% வாக்குகளும், குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 72.79% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இதன்படி தமிழக சட்டமன்ற தேர்தலில் இதுவரை 4 கோடியே 71 லட்சம் பேர் வாக்களித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடத்தில் மாலை 5.00 மணியளவில் 4 கோடி பேர் வாக்களித்திருந்த நிலையில் இம்முறை அதனை விட 70 லட்சம் வாக்குகள் அதிகளவில் பதிவாகியுள்ளன.
இதனை சாதனை வாக்குப் பதிவு என கூறப்படுகிறது.
