Apr 23, 2026 - 06:10 PM -
0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது.
இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6.00 மணிக்கு நிறைவடைந்துள்ளது.
மாலை 6.00 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தால் இரவு 8.00 மணி வரை வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மாலை 5.00 மணி நிலவரப்படி 82.24% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக கரூரில் 89.32% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 73.44% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தலைநகர் சென்னையில் மாலை 5.00 மணி நிலவரப்படி 81.34% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இவற்றில் தொகுதி வாரியாகப் பார்த்தால் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் அதிகபட்சமாக 87.12% வாக்குகளும், குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 72.79% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இதன்படி தமிழக சட்டமன்ற தேர்தலில் இதுவரை 4 கோடியே 71 லட்சம் பேர் வாக்களித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடத்தில் மாலை 5.00 மணியளவில் 4 கோடி பேர் வாக்களித்திருந்த நிலையில் இம்முறை அதனை விட 70 லட்சம் வாக்குகள் அதிகளவில் பதிவாகியுள்ளன.
