Header Logo

செய்திகள்
பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

Apr 24, 2026 - 02:53 PM -

0

பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

குற்றவாளி கூண்டிலிருந்து தாம் வழங்கிய வாக்குமூலத்தில் புதிய விடயங்களைச் சேர்க்க அனுமதிக்குமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (24) நிராகரித்தது. 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்னரே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஊடாக கடமையை சரிவர நிறைவேற்றாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போதே, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குறித்த கோரிக்கையை முன்வைத்திருந்தார். 

நீதிபதி பிரியந்த லியனகே தலைமையிலான மூவர் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்தார். 

இந்த வழக்கின் பிரதிவாதி தரப்பு சாட்சிகளாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க மற்றும் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர ஆகியோரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

title