Apr 24, 2026 - 04:26 PM -
0
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘ரெட்ரோ’. இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், ரசிகர்கள் எதிர்பார்த்த மாஸ் படமாக அமையவில்லை. இதனால், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. முழுக்க முழுக்க பக்கா கமர்ஷியல் திரைப்படமாக ‘கருப்பு’ உருவாகியுள்ளது.
ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே பாலாஜி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
இதற்கிடையே, படத்தின் இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி ‘கருப்பு’ படம் பற்றி தெரிவிக்கையில், “என் மீதான எல்லா விமர்சனங்களையும் ‘கருப்பு’ படத்தின் வெற்றி முடித்து வைக்கும். ‘படையப்பா’, ‘கில்லி’ வரிசையில் இந்தப் படம் இருக்கும்” என்றார். ‘கருப்பு’ திரைப்படம் வரும் மே 14 ஆம் திகதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
