Header Logo

செய்திகள்
840,000 கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

Apr 25, 2026 - 11:21 AM -

0

840,000 கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 840,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 840,411 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 

அவர்களில் பெரும்பாலானோர் இந்தியப் பிரஜைகள் என்பதுடன், அந்த எண்ணிக்கை 176,465 ஆகும். 

அத்துடன் பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 

இதேவேளை, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 99,777 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும், இந்தத் தரவுகளை அவதானிக்கும் போது கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் நாளந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளமை தெரியவருகிறது.

Comments
0

MOST READ

காணொளி
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

title