Apr 25, 2026 - 12:21 PM -
0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'கரந்தெனிய சுத்தாவின் சகோதரரான 'கரந்தெனிய ராஜு' என்பவரது வீட்டுத் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அங்கு புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 9 மில்லிமீற்றர் ரக பிஸ்டல் ஒன்றும் 15 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
கரந்தெனிய ராஜுவினால் வழிநடத்தப்பட்ட பல கொலைச் சம்பவங்களுக்கு இந்தத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸ் மத்திய குற்ற விசாரணைஒ பணியகம் தெரிவித்துள்ளது.
