Header Logo

சினிமா
மீண்டும் தொடங்கிய 'அரசன்' படப்பிடிப்பு பணிகள்!

Apr 25, 2026 - 12:52 PM -

0

மீண்டும் தொடங்கிய 'அரசன்' படப்பிடிப்பு பணிகள்!

வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கலைபுலி தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். 

வட சென்னை பின்னணியில் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, நடிகரும் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக கேள்வி எழுப்பியிருந்தார். 

இதனால் ‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது மீண்டும் தொடங்கும் என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது அனைத்து தடங்கல்களும் சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் பணிகள் மீண்டும் வேகமெடுத்து நடைபெற உள்ளதாகவும், விரைவில் அடுத்த கட்ட அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

title