Apr 26, 2026 - 11:49 AM -
0
மங்களகம, கொஹோம்பகஸ்தலாவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மங்களகம பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர் மங்களகம, கொஹோம்பகஸ்தலாவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் வந்த காட்டு யானையை விரட்ட முயன்ற போதே இந்த யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மங்களகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
