Header Logo

செய்திகள்
உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து - இளைஞன் பலி!

Apr 26, 2026 - 01:39 PM -

0

உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து - இளைஞன் பலி!

கலென்பிந்துணுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உபுல்தெனிய, பஹலகம ஏரி அணையில் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று அணையில் இருந்து கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (25) பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் கந்தளாய், வான்எல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என கலென்பிந்துணுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

விவசாய நடவடிக்கைகளுக்காக சில தினங்களுக்கு முன்னரே குறித்த இளைஞர் இப்பகுதிக்கு வருகை தந்துள்ளார்.

அவர் உபுல்தெனிய பகுதியைச் சேர்ந்த ஒருவரது உழவு இயந்திரத்தில் சாரதியாகப் பணியாற்றி அங்கேயே தங்கியிருந்துள்ளார்.

விபத்து நடந்த தினத்தன்று, உழவு இயந்திர உரிமையாளரின் வயல் நிலங்களை உழுது முடித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே, உழவு இயந்திரம் ஏரி அணையில் இருந்து கீழே கவிழ்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கலென்பிந்துணுவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (26) சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது. சம்பவம் தொடர்பாக கலென்பிந்துணுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

title