Apr 26, 2026 - 07:48 PM -
0
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வநாயகத்தின் 49வது நினைவு நாளும் நினைவுப் பேருரையும் இன்று (26) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
தந்தை செல்வா நினைவு அறங்காவற்குழுவின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வநாயகம் நினைவுத் தூபியில் இந் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
இதன்போது தந்தை செல்வாவின் தூபிக்கு மலர் மாலை அணிவித்து அன்னாரது சமாதியில் மலரஞ்சலியும் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜி.எல் பீரிஸ் சமஷ்டி முறையும் அரசியலமைப்பு சீர்திருத்த பாதையும் எனும் தலைப்பில் நினைவுப் பேருரையாற்றினார்.
இதன்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், உள்ளிட்ட மூத்த அரசியல் பிரமுகர்கள், மத தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
--
