Header Logo

செய்திகள்
போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகளுக்கு எதிராகவும் சட்டம் பாயும்

Apr 27, 2026 - 02:18 PM -

0

போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகளுக்கு எதிராகவும் சட்டம் பாயும்

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 

இன்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமானவர்கள் என்றும், அதற்கமைய பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டமும் பலமானவர்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் கூறினார். 

இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாக மேலும் தெரிவித்தார். 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, 

இச்சம்பவம் தொடர்பாக மகா சங்கத்தினரின் அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் ஒரு பக்கத்தில் செயற்படும் அதேவேளை, சட்டப்பூர்வமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் அதே முறையில் எடுப்போம். 

குறிப்பாக நாங்கள் ஆட்சிக்கு வந்த நாள் முதல், இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து, அதற்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை ஒருவருடைய தராதரத்தைப் பார்த்து எடுப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். 

சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டமும் பலமானவர்களுக்கு இன்னொரு சட்டமும் செயல்பட இடமில்லை. 

யாராவது சட்டவிரோதமாகச் செயல்பட்டால், அதில் தலையிட்டு அவர்களைச் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

title