Header Logo
Vallibel FD
Selan Bank
ஏனையவை
இலங்கைப் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரசின் தூதுக்குழு!

Jun 11, 2026 - 01:19 PM

இலங்கைப் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரசின் தூதுக்குழு!
Mobitel Inner 1278

ஜுன் மாதம் 08 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை House Democracy Partnership (HDP) மற்றும் U.S. Congressional Budget Office (CBO) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், அரச செலவினங்கள், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் முன்மொழியப்பட்ட சட்டங்கள் ஆகியவற்றைச் சுயாதீனமாகப் பகுப்பாய்வு செய்யும் இலங்கைப் பாராளுமன்றத்தின் திறனை பலப்படுத்துவதற்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் உதவி செய்கிறது. 

கொழும்பில் இடம்பெறும் ஒரு வாரகால தொழிநுட்ப உதவிப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக வரவு செலவுத்திட்ட மேற்பார்வை மற்றும் அரச செலவினங்களுக்கான, சுயாதீனமான, பக்கச்சார்பற்ற பகுப்பாய்வினை வழங்குவதில் அமெரிக்காவின் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்காக கிட்டத்தட்ட 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணிக்குழுவினருடன் HDP நிகழ்ச்சித்திட்டத்தின் முகாமையாளரான மேகன் மோர் மற்றும் CBO நிபுணர்களான மேகன் கரோல் மற்றும் கிரிஸ்டி ஹோலி அந்தனி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு தூதுக்குழுவினர் கலந்துரையாடுகின்றனர். 

பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலகத்தின் (PBO) வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு, சட்டமன்ற உறுப்பினர்களின் தகவல் தேவைகளைக் இனங்காணுதல், மற்றும் நீண்டகால நிறுவனரீதியிலான திறனுக்கான ஒரு செயற்திட்டத்தை உருவாக்குதல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுநிதிக் குழுவின் (COPF) பணிக்குழுவினர் ஆகியோருடன் ஒன்றிணைந்து பணியாற்றும் செயல்முறை அமர்வுகளை இந்த ஈடுபாடுகள் உள்ளடக்கியுள்ளன. 

வரவு செலவுத்திட்ட மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பான புறவயப் பகுப்பாய்வை வழங்குவதற்காக, கட்சி சார்பற்ற ஒரு சுயாதீன நிறுவனமான CBO மீது அமெரிக்க காங்கிரஸ் தங்கியுள்ளது. 

இது போன்ற நிறுவனங்கள், முன்மொழியப்பட்ட கொள்கைகள் மற்றும் சட்டங்களின் செலவுகள், பொருளாதாரத் தாக்கங்கள் மற்றும் நீண்டகால நிதிசார் விளைவுகளை மதிப்பீடு செய்வதற்குச் சட்டமியற்றுபவர்களுக்கு உதவுவதன் மூலம், உலகெங்கிலுமுள்ள சட்டவாக்கசபைகளுக்கு உதவி செய்கின்றன. 

பாராளுமன்ற மேற்பார்வை மற்றும் சான்றுகளின் அடிப்படையிலான கொள்கை உருவாக்கம் ஆகியவற்றைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றக் குழுக்களுக்கும் ஒப்பிடத்தக்க பகுப்பாய்வு உதவியினை வழங்குவதற்காக ஒரு பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலகத்தை (PBO) தாபிப்பது தொடர்பாக இலங்கைப் பாராளுமன்றம் ஆராய்கிறது. 

இவ்விஜயத்தின் போது, வரவுசெலவுத் திட்டங்கள் மற்றும் பொதுச் செலவினங்கள் மீதான இலங்கைப் பாராளுமன்றத்தின் மேற்பார்வையினை பலப்படுத்த உதவுவதற்காக, CBO நிபுணர்கள் அமெரிக்க காங்கிரசிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களையும் நடைமுறைக் கருவிகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள். 

இப்பரிமாற்றமானது நிதிசார் பகுப்பாய்வில் அமெரிக்க நிபுணத்துவத்தை எடுத்துக்காட்டுவதுடன், இந்தோ - பசிபிக் பிராந்தியம் முழுவதும் ஸ்திரமான, வெளிப்படையான மற்றும் செழிப்பான பங்காளர்களை மேம்படுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கும் உதவி செய்கிறது. 

வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிவற்றிற்கு தேவையான வலுவான சூழ்நிலைகளை இது உருவாக்குகிறது. இந்நிகழ்ச்சித் திட்டத்தினை முழுமையாக்கும் வகையில், செப்டம்பர் மாதத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று நிர்வாகத்தின் இன்றியமையாத இக்கூறுகளை அமெரிக்காவிற்குச் சென்று நேரடியாகக் கற்றுக்கொள்வதற்கான, ஓர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்திற்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அனுசரணை வழங்கும். 

House Democracy Partnership (HDP) என்பது உலகெங்கிலுமுள்ள ஜனநாயக சட்டவாக்க நிறுவனங்களை பலப்படுத்துவதற்காக ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பணியாற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் இருகட்சி ஆணைக்குழுவாகும். சட்டவாக்க அமைப்புகளை செயற்திறனுடையவையாகவும், அவற்றின் குடிமக்களுக்குப் பதிலளிக்கக்கூடியவையாகவும் மாற்றக்கூடிய கருவிகள், நடைமுறைகள் மற்றும் விழுமியங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் நிறுவனத் திறனைக் கட்டியெழுப்புவதற்காகவும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காகவும், சட்டவாக்க சபைகளின் மேற்பார்வையை அதிகரிப்பதற்காகவும் அதன் பங்காளர்களாகவுள்ள சட்டவாக்கசபைகளுடன் HDP நேரடியாகப் பணியாற்றுகிறது. 

Congressional Budget Office என்பது அமெரிக்க காங்கிரசிற்கு புறவய, சுயாதீனமான பொருளாதார மற்றும் வரவு செலவுத்திட்ட பகுப்பாய்வை வழங்கும் கட்சிசார்பற்ற, சமஷ்டி அரசின் முகவரமைப்பாகும். 

நிலுவையிலுள்ள சட்டங்களுக்கான செலவு மதிப்பீடுகள், 10 ஆண்டு கால வரவுசெலவுத் திட்டம் மற்றும் பொருளாதார முன்கணிப்புகள், மற்றும் ஆழமான கொள்கை ஆராய்ச்சி ஆகியவற்றைத் தயாரிப்பதன் மூலம், சட்டமியற்றும் செயன்முறைக்கு, 1974 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட CBO அலுவலகம் உதவி செய்கிறது. இது நிதிக் கொள்கைகள் தொடர்பாக முன்பே தகவலறிந்த, சான்றுகளின் அடிப்படையிலான முடிவுகளை மேற்கொள்வதற்கு சட்டமியற்றுபவர்களுக்கு உதவி செய்கிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
05
172ஆவது வருடாந்திர பொதுக்கூட்டத்தில், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் புதிய தலைவர், இத்தொழிற்துறையின் மறுமலர்ச்சிக்கான 5 அம்சத் திட்டத்தை முன்மொழிந்த

172ஆவது வருடாந்திர பொதுக்கூட்டத்தில், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் புதிய தலைவர், இத்தொழிற்துறையின் மறுமலர்ச்சிக்கான 5 அம்சத் திட்டத்தை முன்மொழிந்த

Sep 22, 2026 - 05:12 PM


காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278