Header Logo
Mogo Academy

செய்திகள்
ஜப்பான் நிலநடுக்கம் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

Jul 28, 2026 - 06:16 PM -

0

ஜப்பான் நிலநடுக்கம் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!
Mobitel inner

ஜப்பானின் தெற்குப் பகுதியான குமமோட்டோவில் (Kumamoto) இன்று (28) ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான பலத்த நிலநடுக்கம் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

 

இதில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

வணிக வளாகம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், தீப்பற்றியுள்ளதாகவும், வரலாற்று சிறப்புமிக்க குமமோட்டோ கோட்டையின் சுவர்களும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை, சுமார் 40,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், கைபேசி சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

 

அதிவேக ரயில்கள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், குமமோட்டோ விமான நிலையத்தின் ஓடுபாதைகளும் மூடப்பட்டுள்ளன.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக TSMC (சிப் தயாரிப்பு நிறுவனம்), Sony மற்றும் Fujifilm போன்ற முன்னணி நிறுவனங்களின் ஊழியர்கள் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

ஆரம்பத்தில் சுமார் ஒரு மீற்றர் உயரத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், பின்னர் அது விலக்கிக்கொள்ளப்பட்டது.

 

நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவிசம் செய்துள்ளது.

 

இதனிடையே, எதிர்வரும் வாரத்தில் மேலும் நிலநடுக்க அதிர்வுகள்  மற்றும் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என்பதால் அவதானத்துடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara