Header Logo
Mogo Academy

செய்திகள்
தொலைபேசிகளுக்கு அடிமையானமையால் குடும்பக் கட்டமைப்பில் வீழ்ச்சி

Jul 30, 2026 - 08:40 AM -

0

தொலைபேசிகளுக்கு அடிமையானமையால் குடும்பக் கட்டமைப்பில் வீழ்ச்சி
Mobitel inner

தற்போதைய சமூகத்தில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு மக்கள் அடிமையாகியுள்ளதன் காரணமாக குடும்பக் கட்டமைப்பு மற்றும் மனித உறவுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவிக்கின்றார். 

திறந்த சந்தைப் பொருளாதாரம் இந்நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதோடு சமூகத்திற்குள் நுகர்வுவாதம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் மூலம் மக்கள் மத்தியில் செயற்கையான ஆசைகளை உருவாக்கி பணம் சம்பாதிப்பதுவே இன்று சமூகத்தை இயக்கும் பிரதான காரணியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

சீதுவை பகுதியில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

திறந்த சந்தைப் பொருளாதாரமானது மக்கள் மத்தியில் இதற்கு முன்னர் இல்லாத எல்லையற்ற ஆசைகளையும் தேவைகளையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், சந்தையானது மக்களின் உண்மையான தேவைகளின் அடிப்படையில் அன்றி, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆசைகள் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே கட்டுப்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


MOST READ

காணொளி
செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

Mobitel Upahara