Header Logo
Mogo Academy

செய்திகள்
நாட்டில் 84 ஆயிரத்திற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம்

Jul 30, 2026 - 09:57 AM -

0

நாட்டில் 84 ஆயிரத்திற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம்
Mobitel inner

இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 84,000-ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

84,091 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

நேற்று (29) எவ்வித டெங்கு மரணங்களும் பதிவாகவில்லை என்பதுடன், இதுவரை சம்பவித்துள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 61 ஆகும். 

அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அங்கு பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 17,850 ஆக அதிகரித்துள்ளது. 

இரண்டாவது அதிகளவிலான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 16,716 ஆகப் பதிவாகியுள்ளது. 

இதற்கமைவாக, இந்த ஆண்டில் இதுவரை மேல் மாகாணத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 44,552 ஆகப் பதிவாகியுள்ளது. 

இரண்டாவது அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் தென் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அம்மாகாணத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 12,656 ஆகும். 

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவி வரும் இக்காலக்கட்டத்தில், 175 அதி அபாய வலயங்கள் உள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


MOST READ

காணொளி
செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

Mobitel Upahara