Header Logo
Mogo Academy

வணிகம்
ஹட்ச் தனது கஹவணு உதானய விற்பனையாளர் பங்குதாரர் திட்டத்தின்கீழ், ரூ. 200 மில்லியனுக்கும் அதிகமான வெகுமதிகளை வழங்கியுள்ளது

Jul 30, 2026 - 11:31 AM -

0

ஹட்ச் தனது கஹவணு உதானய விற்பனையாளர் பங்குதாரர் திட்டத்தின்கீழ், ரூ. 200 மில்லியனுக்கும் அதிகமான வெகுமதிகளை வழங்கியுள்ளது
Mobitel inner

ஹட்ச் [Hutch] நிறுவனம், தமது நிறுவனத்தின் தயாரிப்புகளை அதிகம் விற்பனை செய்து உதவிய விற்பனை விருதுவழங்கும் கஹவணு உதானய 4-வது கட்ட வெகுமதிகள் வழங்கும் நிகழ்வினை பத்தரமுல்ல, வோட்டர்ஸ் எட்ஜ்-இல் மிக பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளது. 

இந்தத்திட்டம் 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது, இதில் வெறும் 100 விற்பனையாளர்களே பங்கேற்றனர். மேலும், இதன் முதல் கட்டத்தில் ரூ. 15 மில்லியன் (1.5 கோடிரூபாய்) வெகுமதிகயாக வழங்கப்பட்டது. தற்போது இந்தத்திட்டம் மிகவேகமாக வளர்ச்சியடைந்து, தொலைதொடர்பாடல் வர்த்தகத்துறையில் உள்ள மிக விரிவான திட்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 

நாடு முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் இப்போது இதில் இணைந்துள்ளனர். இதன் 4-வது கட்டம் நிறைவடையும் நிலையில் தற்போது மொத்தம் ரூ. 200 மில்லியனுக்கும் (20 கோடிரூபாய்க்கும்) அதிகமான வெகுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த நிகழ்வின் நான்காவது கட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வெகுமதிகளை வழங்கியுள்ளது. 20 விற்பனையாளர்கள் ரூ. 10 லட்சத்திற்கு (1மில்லியன்) அதிகமான பெறுமதியுடைய வெகுமதிகளை வென்றுள்ளனர். இதில் ஒரு விற்பனையாளர் ரொக்கப்பரிசாக ரூ.20 லட்சத்தை வென்றுள்ளார். மொத்தம் 447 தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒருவர் 8 தங்க நாணயங்களையும், மற்றொருவர் 4 தங்க நாணயங்களையும் பெற்றுள்ளனர். மூன்று விற்பனையாளர்கள் மின்சாரவாகனங்கள் (EV) உள்ளிட்ட நவீனரக மோட்டார் சைக்கிள்களை வென்றுள்ளனர். 

இலங்கை முழுவதிலுமுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் விற்பனைப் பங்காளர்கள் பங்கேற்றதன் மூலம், இந்நிகழ்வு இத்திட்டத்தின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கும் தன்மையை வெளிப்படுத்தியது. கஹவனு உதானய திட்டம், அவர்களின் பங்களிப்பை அங்கீகரித்து கௌரவிக்கும் ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது. இந்த விற்பனையாளர்களே HUTCH நிறுவனத்தின் வெற்றிக்கான உந்து சக்தியாக இருந்து, நாடு முழுவதும் உள்ள சமூகங்களுடனான அதன் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர்.ஹட்ச் நிறுவனத்தை பொறுத்தவரை, இந்தத்திட்டம் என்பது வெறும் பாராட்டுக்குரியது மட்டும் அல்ல. நாடு முழுவதும் உள்ள தமது வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் அவர்கள் உருவாக்கும் பெறுமதிக்காக, தமது விற்பனையாளர் பங்குதாரர் பிரிவில் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்வதை இது பிரதிபலிக்கிறது. 

எமது புத்தாக்கங்களை நாடு முழுவதும் உள்ள மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், எமது விற்பனை பங்குதாரர்கள் சந்தையில் முன்னணியில் உள்ளனர் என்று ஹட்ச் ஸ்ரீலங்காவின் பிரதம விற்பனை அதிகாரி தரிந்து விஜேரத்ன தெரிவித்தார். எமது பரந்த பங்குதாரர் வலையமைப்பை அங்கீகரிக்கும் ஒரு வழியாகவே கஹவனு உதானய உள்ளது. இதுவே, எமது விற்பனையாளர்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. கட்டம் 4 எமது மிகப்பெரிய சாதனையாகும்; மேலும், இந்தத்திட்டம் எவ்வாறு சமூகதாக்கத்தையும் கூட்டு வெற்றியையும் மேம்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும். 

வெகுமதிகளை தொடர்ந்து வழங்கி அவர்களின் சமூகத்தையும் விரிவுபடுத்தும் நோக்கில் ஹட்ச் நிறுவனம் தனது வெகுமதி திட்டத்தின் 5வதுகட்டத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.


MOST READ

காணொளி
செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

Mobitel Upahara