Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
Sriyani Dress Point வருடாந்த ஊழியர் விருதுகள் 2026 விழாவை சிறப்பாக கொண்டாடியது

Jul 30, 2026 - 01:32 PM

Sriyani Dress Point வருடாந்த ஊழியர் விருதுகள் 2026 விழாவை சிறப்பாக கொண்டாடியது
Mobitel Inner 1278

இலங்கையின் முன்னணி நவநாகரீக ஆடை விற்பனையாளர்களுள் ஒன்றான Sriyani Dress Point, தனது வருடாந்த ஊழியர் விருது வழங்கல் விழா 2026 நிகழ்வை அண்மையில் Monarch Imperial Colombo மண்டபத்தில் நடாத்தியது. அர்ப்பணிப்பு, மேன்மை மற்றும் சிறந்த திறமைகளைக் கொண்டாடும் வகையில், நாடு முழுவதிலும் உள்ள அதன் கிளைகளிலிருந்து 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்நிகழ்வில் ஒன்றிணைந்தனர். 

இலங்கை முழுவதிலும் நிறுவனத்தின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் தொடர்ந்தும் உந்துசக்தியாகத் திகழும் ஊழியர்களைக் கெளரவிக்கும் பொருட்டு, அனைத்துக் காட்சியறைகள் மற்றும் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பணியாளர்கள், சிரேஷ்ட முகாமைத்துவப் பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்டோர் இந்த வருடாந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 

இந்நிறுவனத்தில் 10, 15 மற்றும் 20 வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த நீண்டகால ஊழியர்கள் கெளரவிக்கப்பட்டமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்ததுடன், இது நிறுவனத்தின் வலுவான அர்ப்பணிப்பு, விசுவாசம் மற்றும் தொழில்முறை வளர்ச்சி கலாசாரத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்தது. நீண்டகால சேவை விருதுகளுக்கு மேலதிகமாக, 2025 மே முதல் 2026 ஏப்ரல் வரையிலான மதிப்பீட்டுக் காலப்பகுதியில் சிறந்த வாடிக்கையாளர் சேவை, இலக்குகளை அடைதல், தரத்தைப் பேணுதல் உள்ளிட்ட முக்கிய தொழிற்பாட்டுச் செயல்திறன் குறிகாட்டிகளின் அடிப்படையில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய ஊழியர்களும் குழுக்களும் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். 

1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Sriyani Dress Point, ஒரேயொரு ஆடை விற்பனை நிலையம் என்ற நிலையில் இருந்து வளர்ச்சி பெற்று, இன்று இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற ஆடை மற்றும் வாழ்வியல் மையங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. இந்நிறுவனம் ஆடைகள், ஆபரணங்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வீட்டுத் தேவைகளுக்கானப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்குப் பரந்தளவில் வழங்கி வருகின்றது. தற்போது, கண்டி நகரத்தின் மையப்பகுதியில் இரண்டு பிரதான கிளைகளையும் கேகாலை, குருணாகல், மாத்தளை, நீர்கொழும்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் கண்கவர் காட்சியறைகளையும் சேர்த்து மொத்தம் எட்டு கிளைகளை இயக்கி வரும் இந்நிறுவனம், தனது வணிகத்தை மேலும் விரிவுபடுத்தும் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக, தேசிய அளவிலான தனது சந்தையைப் பலப்படுத்தி, அதிகமான மக்களுக்கு சாதாரண விலையில் உயர் தரத்தில் ஆடை அலங்காரங்களை கொண்டுசேர்க்கும் நோக்கில், நடப்பு ஆண்டின் பிற்பகுதியில் கொழும்பில் புதியதொரு காட்சியறையைத் திறப்பதற்கும் ஆயத்தமாகி வருகின்றது. 

இன்று, பல்வேறு துறைகளிலும் அனுபவம் வாய்ந்த குழுக்களின் ஆதரவுடன், 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பெருநிறுவனமாக இது உருவெடுத்துள்ளது. அத்துடன், நிறுவனத்தின் பணிப்பாளர்களான மதுஷிகா செல்வராஜ், தினுஷிகா செல்வராஜ் மற்றும் ஷப்ரஜித் செல்வராஜ் ஆகியோர் வணிகத்தின் முக்கிய துறைகளைக் கண்காணித்து, அதன் தொடர்ச்சியான விரிவாக்கத்திற்கு ஆதரவளிப்பதுடன், அடுத்த தலைமுறைத் தலைவர்களாக நிறுவனத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் தீவிர பங்காற்றி வருகின்றனர். 

எமது வலையமைப்பு முழுவதும் அனுதினம் எமது பணியாளர்கள் வெளிப்படுத்தும் சிறப்பான அர்ப்பணிப்பு, அக்கறை மற்றும் தொழில்முறைத் தன்மையை அங்கீகரிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே இந்த வருடாந்த ஊழியர் விருது வழங்கல் நிகழ்வு அமைகின்றது. Sriyani Dress Point நிறுவனத்தின் வெற்றியானது எப்போதுமே எமது மக்களின் அர்ப்பணிப்பிலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. நிறுவனம் வளர்ச்சியடையும் போது, அதனுடன் இணைந்து வளரும் எம்மவர்களின் வாழ்க்கையும் முன்னேற வேண்டும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மாரியாப்பிள்ளை செல்வராஜ் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இந்த வணிகத்தை ஆரம்பித்த போது, எனது தற்போதைய பொது முகாமையாளரான கனகராஜ் மற்றும் நான் ஆகிய இருவரால் மட்டுமே பணிகள் முகாமைத்துவம் செய்யப்பட்டன. இன்று 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தைக் கட்டியெழுப்பியுள்ளதையிட்டு நாம் பெருமிதமடைகின்றோம். அத்துடன், புதிய காட்சியறைகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், எமது அடுத்த ஊழியர் விருது வழங்கும் விழாவிற்கு முன்னர் இந்த எண்ணிக்கை மேலும் 300 ஊழியர்களால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றோம். ஊழியர்கள் வியாபாரத்துடன் இணைந்து வெற்றியடைவதையும் வளர்வதையும் காண்பது, எமது வர்த்தகநாமத்தின் எதிர்காலம் குறித்தும், வலுவான தேசிய பொருளாதாரத்திற்கான எமது பங்களிப்பு குறித்தும் எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. மக்கள் வளம்பெறும்போது, நாடும் வளம்பெறுகின்றது எனக் குறிப்பிட்டார். 

ஊழியர்களை அங்கீகரிப்பதானது நிறுவனத்தின் கலாசாரம் மற்றும் நீண்டகால தொலைநோக்கின் முக்கிய தூணாக விளங்குவதுடன், ஊழியர்கள் மதிக்கப்படுவதாகவும், ஊக்கமளிக்கப்படுவதாகவும், சிறந்து விளங்க உந்தப்படுவதாகவும் உணரும் ஒரு சூழலை உருவாக்க உதவுகிறது என்றும் தலைவர் சுட்டிக்காட்டினார். 

Sriyani Dress Point தனது விரிவாக்கப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், தனது பணியாளர்களின் வேலை திறனை விருத்தி செய்வதற்கும் மனித வளத்தை மேலும் அபிவிருத்தி செய்யவும் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. வணிக வளர்ச்சியும் ஊழியர்களின் செழிப்பும் ஒன்றோடொன்று இணைந்தே பயணிக்கின்றன என்ற நம்பிக்கையின் அடிப்படையில், வர்த்தகநாமத்துடன் இணைந்து தன்னவர்களை வளரவும், வெற்றியடையவும், தழைத்தோங்கவும் வாய்ப்புகளை நிறுவனம் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இது வலுவான சமூகங்களுக்கும், மேலும் வளமானதொரு தேசத்திற்கும் வழிவகுக்கின்றது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

Mobitel 1278